பொது செய்தி

தமிழ்நாடு

ரயிலில் செல்லும் போது வீசுங்கள்! பயணியருக்கு வேப்ப மர விதைகள் வழங்கல்

Added : நவ 17, 2019
Advertisement
 ரயிலில் செல்லும் போது வீசுங்கள்! பயணியருக்கு வேப்ப மர விதைகள் வழங்கல்

சென்னை:சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், எழும்பூர் நிலையத்தில் பயணியருக்கு, வேப்ப மர விதைகளை வழங்கி, ரயில்வே போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புவி வெப்பமயமாதலை தடுக்க, மரங்கள் வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, சென்னை, எழும்பூர் ரயில் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மகுமாரி மற்றும் போலீசார், விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.எழும்பூரில் இருந்து, நேற்று இயக்கப்பட்ட பல்லவன், திருச்செந்துார் ரயில் பயணியருக்கு, வேப்ப மர விதைகளை வழங்கினர்.
போலீசார் கூறியதாவது:சொந்த ஊர் சென்றதும், வீட்டில் இட வசதி உள்ளோர் விதையை முளைக்க வைத்து, மரங்கள் வளர்க்க வேண்டும். இட வசதி இல்லாதவர்கள், போகும் வழியில், ஈரப்பதம் உள்ள பகுதியில், விதைகளை வீசி விட்டு செல்லும் படி அறிவுறுத்துகிறோம்.மரங்கள் வளர்ப்பின் அவசியம் குறித்தும், வேப்ப மரத்தின் மருத்துவக் குணங்கள் குறித்தும், பயணியருக்கு எடுத்துரைக்கிறோம். எழும்பூரில் இருந்து, இயக்கப்படும் அனைத்து ரயில்களில் செல்லும் பயணியருக்கும், வேப்ப விதைகளை வழங்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X