பொது செய்தி

தமிழ்நாடு

அமெரிக்க பயணம் நிறைவு: இன்று திரும்புகிறார் ஓ.பி.எஸ்.,

Updated : நவ 18, 2019 | Added : நவ 17, 2019 | கருத்துகள் (12)
Advertisement
அமெரிக்க, பயணம்,நிறைவு, இன்று,திரும்புகிறார், ஓ.பி.எஸ்.,

சென்னை:அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற துணை முதல்வர் பன்னீர்செல்வம்10 நாள் பயணத்தை முடித்து, இன்று தமிழகம் திரும்புகிறார்.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அரசு முறை பயணமாக, துணை முதல்வர் பன்னீர்செல்வம், இம்மாதம், 8ம் தேதி அதிகாலை, சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.துணை முதல்வருடன், அவரது மகனும், தேனி எம்.பி.,யுமான ரவீந்திரநாத் குமார், நிதித்துறை செயலர் கிருஷ்ணன் ஆகியோரும் சென்றனர்.

அமெரிக்காவில் கடும் குளிர் வீசியதால், துணை முதல்வர் பன்னீர்செல்வம் வேட்டி, சட்டை அணிந்து, சட்டையின் மேல் கோட் அணிந்து, பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.அவருக்கு, 'தங்க தமிழ்மகன்' விருது, சர்வதேச வளரும் நட்சத்திரம் விருது உள்ளிட்ட, பல்வேறு விருது களும் வழங்கப்பட்டன.வாஷிங்டன் நகரில் உள்ள, சர்வதேச நிதி நிறுவன அலுவலகம் சென்று, தமிழக நிதி செலவினம் மற்றும் நிதி திறன் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து, ஆலோசனை நடத்தினார்.
உலக வங்கியின் தலைமை அலுவலகம் சென்று, தமிழகத்தில் குடிநீர், வீட்டுவசதி, போக்குவரத்து மேம்பாட்டு திட்டங்களுக்கு தேவையான நிதி உதவிகளை பெறுவது குறித்து விவாதித்தார். அதுமட்டுமின்றி, முதலீட்டாளர்கள் சந்திப்பு உள்ளிட்ட, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.

தொழில் முதலீடுகள் மேற்கொள்வதற்காக, அந்நாட்டு தொழில் நிறுவனங்களுடன், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் நிகழ்விலும் பங்கேற்றார். தன், 10 நாள் சுற்றுப்பயணத்தை முடித்து, துணை முதல்வர் பன்னீர்செல்வம், இன்று தமிழகம் திரும்ப உள்ளார். சென்னை விமான நிலையத்தில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க, அ.தி.மு.க.,வினர் திட்டமிட்டு உள்ளனர்.
துாதரக அதிகாரி உறுதி அரசு முறை பயணமாக, அமெரிக்கா சென்ற துணை முதல்வர் பன்னீர்செல்வம், நியூயார்க் நகரில், இந்திய துாதரக அதிகாரி சந்தீப் சர்க்கரவர்த்தியை, நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் தொழில் முதலீடுகள் அதிகரிப்பதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக, துணை முதல்வரிடம், இந்திய துாதரக அதிகாரி உறுதி அளித்தார். அவருக்கு, துணை முதல்வர் நன்றி தெரிவித்தார். இந்தசந்திப்பின் போது, அரசின் நிதித்துறை செயலர்கிருஷ்ணனும் உடனிருந்தார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
19-நவ-201906:04:03 IST Report Abuse
skv srinivasankrishnaveni படிக்காதவாளுக்கு ஏவாளும் Dr பட்டம் வழங்கினால் அதுகேவலம் அரும்பாடுபட்டு படிச்சு பல இன்னல்களையும் அனுபவித்து முனைவர்பட்டம் பெறுவது எவ்ளோகஷ்டம் என்பது பிஹெச் டீ பண்ணினவாலுக்கெல்லாம் நன்னாவே தெரியும் .ஒருதிறமையும் இல்லாதைக்கு வாங்கிட்டு அதை தன்பெயருக்கு முன்னாடி போடுவது உலகமகா அசிங்கம் கேவலம் , மெய்யாவேபடிச்சுப்பாட்டம் வாங்கினவள் கேவலப்படுத்துறாங்க அண்மையில் நடிகர் சார்லி சினிமா சம்பந்தமா ஆராய்ச்சி செய்து டர் பட்டம் வாங்கிருக்கார் அது பெஸ்ட் , திறமைகள் ஏதுமில்லாது பதவியே இருக்கும் ஒருவருக்கு இந்தமாதிரி பட்டம் தரவே கூடாது
Rate this:
Share this comment
Cancel
18-நவ-201920:36:34 IST Report Abuse
ஆப்பு கும்முனு வாஷிங்டன் கொண்டான்... சிகாகோ கண்டான் நு பட்டம் குடுங்க.
Rate this:
Share this comment
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
19-நவ-201910:16:00 IST Report Abuse
skv srinivasankrishnaveniஅட என்னங்க இது பெரிய அதிசயம் எங்கஊருலே இருக்கும் கெங்கேம்மா பாட்டியும்கூட அமேரிக்கா ரெடுக்ன் தானுங்க சமீபத்துல தான் இறந்துபோனாங்க அவங்க படிக்கவேயில்லீங்க கைநாட்டுதான் என்று சொல்லுவாங்க பிள்ளை யு எஸ் லே பெரிய ஜோலிலே இருக்காங்க அவர்மனைவி டாக்டராம் யுனிவர்சிட்டிலே வேலைபாக்குறாங்க என்றும் பேரன் பேத்திகளெல்லா நெறைய பேரிய படிப்பு படிச்சுருக்காங்க என்றும் சொல்லிண்டேயிருந்தாங்க பலமுறை போயிவந்துருக்கேன் என்றும் சொல்லிருக்காங்க. இன்று இந்தியாலெவேலை கிடைக்கலேன்னா கூப்பிட்டு வேலைகொடுக்குறான் பாரின் லே எல்லாம் ஒலோபெரிய மதிப்புங்கோ படிச்சபிள்ளைகளுக்கு மந்திரிகள் எல்லாம் அரசுத்துட்டுலே போறாங்க நம்மளைப் போல சாமானியர்களெல்லாம் நம்ம துட்டுலேதான் பாத்துட்டுவாரொமுழுக்கோ...
Rate this:
Share this comment
Cancel
18-நவ-201919:45:07 IST Report Abuse
ஆப்பு கடன் கேக்கத்தான் போனாரா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X