பரூக் அப்துல்லா வருவாரா?

Updated : நவ 19, 2019 | Added : நவ 17, 2019 | கருத்துகள் (4)
Advertisement
துவங்குது,பார்லி., கூட்ட,தொடர்,20நாட்களில், 27 மசோதா நிறைவேற்ற ,திட்டம்

புதுடில்லி:பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் இன்று துவங்கியது. பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை, ஜம்மு - காஷ்மீர் என, பல முக்கிய பிரச்னைகளை முன்வைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. காஷ்மீர் வீட்டுக்காவலில் உள்ள பரூக் அப்துல்லா விடுவிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதே நேரத்தில், மொத்தம், 20 நாட்கள் நடைபெற உள்ள கூட்டத் தொடரில், குடியுரிமை மசோதா உட்பட, 27 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இரண்டாவது முறை, பா.ஜ., அரசு அமைந்த பின். முதல் கூட்டத் தொடர் மிகவும் சுமுகமாக நடந்தது. முத்தலாக், தேசிய புலனாய்வு அமைப்புக்கு கூடுதல் அதிகாரம் உட்பட, பல முக்கிய மசோதாக்கள், அந்தக் கூட்டத் தொடரில் நிறைவேறின.

இந்த நிலையில், பார்லி.,யின் குளிர்கால கூட்டத் தொடர், இன்று துவங்குகிறது. வரும் டிசம்பர், 13 வரை, மொத்தம், 20 நாட்கள் அலுவல் நடக்க உள்ளன. இந்தக் கூட்டத் தொடரில், 27 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்மிட்டு உள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 'கார்ப்பரேட் வரி'யைக் குறைத்து அமல்படுத்தப்பட்ட அவசர சட்டத்துக்கான மசோதா, 'இ - சிகரெட்' போன்ற பொருட்களை தடை செய்யும் அவசர சட்டத்துக்கான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளன.

இதைத் தவிர, குடியுரிமை சட்ட திருத்த மசோதா இந்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, அகதிகளாக வந்துள்ள ஹிந்து, சீக்கியர் உள்ளிட்டோருக்கு, இந்தியக் குடியுரிமை அளிக்கும் வகையில், இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த மசோதா ஏற்கனவே லோக்சபாவில் நிறைவேறியது. ஆனால், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் ராஜ்யசபாவில் நிறைவேறவில்லை. கடந்த லோக்சபாவின் காலம் முடிந்ததால், இந்த மசோதா காலாவதியானது. அதையடுத்து மீண்டும் தாக்கல் செய்யப்படுகிறது.இந்த மசோதாவுக்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந்த நிலையில், பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்தப் பிரச்னைகளை எழுப்ப, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில், நேற்று முன்தினம்(நவ.16) நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், 'எங்களுடைய கேள்விகளுக்கு, அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

பல்வேறு முக்கிய பிரச்னைகள் மற்றும் மசோதாக்கள் விவாதத்துக்கு வருகிறது என்பதால், இந்த குளிர்கால கூட்டத் தொடர் விறுவிறுப்பாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


பரூக் அப்துல்லா வருவாரா?



பார்லி.,யின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று துவங்க உள்ள நிலையில், சபையை சுமுகமாக நடத்துவது தொடர்பாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து இருந்தார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற, தேசிய மாநாட்டு கட்சி எம்.பி., ஹூசைன் மசூத் பேசியதாவது: ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். லோக்சபா எம்.பி.,யாக உள்ள அவர், பார்லிமென்ட் கூட்டத் தொடரில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

அவரைத் தொடர்ந்து, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இதை வலியுறுத்தின. ஆனால், அரசு தரப்பில் எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை.அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்து, பார்லி., விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாவது:கடந்த கூட்டத் தொடரைப் போலவே, இந்தக் கூட்டத் தொடரும் எவ்வித ஒத்திவைப்பும் இல்லாமல் செயல்பட வேண்டும் என, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்கத் தயாராக உள்ளதாகவும் கூறினார். 'இந்தக் கூட்டத் தொடர் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்' என, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மோடி குறிப்பிட்டு உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
20-நவ-201902:13:20 IST Report Abuse
 nicolethomson வெளிநாட்டில் இருந்து வரும் அகதி இந்துக்கள் ? ஆனா உள்நாட்டிலேயே இந்துக்களை அகதிகள் ஆக்கும் கட்சிகளை , கட்சித்தலைவர்களை என்ன செய்ய போறீங்க ?
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
18-நவ-201912:59:01 IST Report Abuse
RajanRajan பருக் வரமாட்டன் ஓய்வில் இருக்றான்.
Rate this:
Share this comment
Cancel
siriyaar - avinashi,இந்தியா
18-நவ-201909:36:49 IST Report Abuse
siriyaar Anti conversion law is top priority with provision when inter religion marriage auto conversion to majority religion of country.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X