சீராய்வு மனு!அயோத்தி வழக்கில் முஸ்லிம் சட்ட வாரியம் முடிவு;மசூதிக்கு வழங்கப்படும் மாற்று இடத்தை ஏற்க மறுப்பு

Updated : நவ 19, 2019 | Added : நவ 17, 2019 | கருத்துகள் (14+ 37)
Advertisement
சீராய்வு மனு!,அயோத்தி வழக்கில், முஸ்லிம் சட்ட வாரியம், முடிவு,

லக்னோ:அயோத்தி வழக்கில், சீராய்வு மனு தாக்கல் செய்ய, அகில இந்திய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது, மேலும், 'அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அரசு வழங்க உள்ள நிலத்தை ஏற்க போவதில்லை' எனவும், இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால், சன்னி வக்பு வாரியம், அயோத்தி தீர்ப்பு தொடர்பாக, சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என, அறிவித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, கடந்த, 9ம் தேதி தீர்ப்பளித்தது. தீர்ப்பில் கூறியிருப்பதாவது:


அறக்கட்டளை



'அயோத்தியில், சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலம், மத்திய அரசுக்கு சொந்தமானது. இதை, ராமர் கோவில் கட்ட வழங்க வேண்டும். ராமர் கோவில் கட்டுவதற்கு, மூன்று மாதத்தில், அறக்கட்டளை அமைக்க வேண்டும். அயோத்தியில் முக்கியமான இடத்தில் மசூதி கட்ட, சன்னி வக்பு வாரியத்திடம், 5 ஏக்கர் நிலத்தை, மத்திய அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு, பல்வேறு அரசியல் கட்சிகள், ஹிந்து, முஸ்லிம் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்தன. எனினும், அகில இந்திய முஸ்லிம் தனி சட்ட வாரியம், தீர்ப்பு குறித்து அதிருப்தி தெரிவித்தது.

இவ்வழக்கில், சீராய்வு மனு தாக்கல் செய்வது பற்றி ஆலோசித்து முடிவு செய்யப் போவதாக வும் தெரிவித்திருந்தது.இந்நிலையில், அகில இந்திய முஸ்லிம் தனி சட்ட வாரியத்தின் கூட்டம், உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில், நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு பின், வாரியத்தின் பொதுச் செயலர், மவுலானா வாலி ரஹ்மானி, கூறியதாவது: அயோத்தி வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அதிருப்தி அளிப்பதாக, முஸ்லிம் தனி சட்ட வாரியம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.இந்த வழக்கில், சீராய்வு மனு தாக்கல் செய்வது பற்றி, பல்வேறு முஸ்லிம் அமைப்புகளுடன், முஸ்லிம் தனி சட்ட வாரியம், நேற்று முன்தினம் தீவிர ஆலோசனை நடத்தியது.


ஏற்க முடியாது



லக்னோவில் நேற்று நடந்த கூட்டத்தில், அயோத்தி வழக்கு தீர்ப்பை சீராய்வு செய்ய கோரி, மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம், ஷரியத் சட்டப்படி, அல்லாவுக்கு சொந்தமானது. இதை வேறு யாருக்கும் வழங்க முடியாது. சர்ச்சைக்குரிய நிலத்தில் மீண்டும் மசூதி கட்டுவதைத் தவிர, வேறு எந்த தீர்வையும் ஏற்க முடியாது. அதனால், அயோத்தியில், மசூதி கட்டிக் கொள்ள, மத்திய அரசு வழங்கும் நிலத்தை ஏற்க வேண்டாம் என, முடிவு செய்து உள்ளோம்.

அயோத்தியில், பாபர் மசூதிக்குள், 1949ம் ஆண்டு, டிச., 23ம் தேதி இரவு, ராமர் சிலை அத்துமீறி வைக்கப்பட்டது. இது, அரசியல் சட்டத்துக்கு விரோதமான செயல். ஆனால், இந்த சிலைகளை, வழிபாட்டுக்குரியது என, உச்ச நீதிமன்றம் எப்படி கூறியது என, தெரியவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.இதேபோல், ஜாமியத் உலமா - ஐ - ஹிந்த் அமைப்பும், சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.

இது பற்றி, ஜாமியத் அமைப்பின் தலைவர், மவுலானா அர்ஷத் மதானி கூறியதாவது:அயோத்தி தீர்ப்பு பற்றி, வழக்கறிஞர்கள் மற்றும் நிபுணர்களிடம் விரிவாக ஆலோசனை நடத்தினோம். அதன் பின், உச்ச நீதிமன்றத்தில், சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்தோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளது. மேலும், இது இறுதி தீர்ப்பு அல்ல. அரசியல் சட்டத்தின் படி, தீர்ப்பை சீராய்வு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, மதானி கூறினார்.


எதிர்ப்பு

எனினும், 'அயோத்தி வழக்கில், சீராய்வு மனு தாக்கல் செய்ய போவதில்லை' என, சன்னி மத்திய வக்பு வாரியம் அறிவித்துள்ளது.அயோத்தி வழக்கில், முக்கிய மனுதாரர்களில் ஒருவராக, சன்னி வக்பு வாரியம் இருந்தது. இதன் தலைவர், ஜாபர் பரூக்கி கூறியதாவது:

அயோத்தி வழக்கில், சீராய்வு மனு தாக்கல் செய்வதால், எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. அதனால், சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என, சன்னி வக்பு வாரியம் முன்பே அறிவித்துவிட்டது. அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் நடத்திய கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதனால், நான் பங்கேற்கவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.


நிதி வசூலிக்கவில்லை: பரிஷத்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, யாரிடமும் நிதி வசூல் செய்யவில்லை என, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.இந்த அமைப்பின் சர்வதேச பொதுச் செயலர், மிலிந்த் பரான்டே வெளியிட்டுள்ள அறிக்கை:.

ராமஜன்ம பூமி போராட்டத்தை, 1989ல் நாங்கள் துவங்கினோம். அது முதல், நாங்களும் சரி, ராம ஜன்மபூமி நியாஸ் அமைப்பும் சரி, ராமர் கோவில் கட்டுவதற்காக, யாரிடமும் எந்த நிதியும் வசூல் செய்யவில்லை. அது பற்றி அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்னும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, நன்கொடை வாங்குவது தொடர்பாக, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பும், ராமஜன்மபூமி நியாஸ் அமைப்பும், எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ராமர் கோவில் கட்டுவதற்காக, விஸ்வ ஹிந்து பரிஷத் பெயரில் யாராவது பணம் கேட்டால், தர வேண்டாம் என, மக்களை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


முக்கிய மனுதாரர் எதிர்ப்பு


அயோத்தி வழக்கில், முஸ்லிம்கள் தரப்பில், முக்கிய மனுதாரராக கருதப்படுபவர், இக்பால் அன்சாரி. இவர் தந்தை தொடர்ந்த வழக்கை, அவரது மறைவுக்கு, அன்சாரி நடத்தி வந்தார்.
இந்நிலையில், அயோத்தி வழக்கில், சீராய்வு மனு தேவையில்லை என, அன்சாரி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

அயோத்தி வழக்கில், சீராய்வு மனு தாக்கல் செய்வதால், தீர்ப்பு மாறி விடாது. ஆனால், சமூகத்தின் அமைதி கெடும். அயோத்தி பிரச்னையில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை, அனைவரும் மதித்து ஏற்க வேண்டும். இந்த பிரச்னையை, மேலும் இழுத்தடிப்பது தேவையற்றது.
இவ்வாறு, அவர் கூறினார்.

'ராம் நாம் வங்கி' போனஸ் அறிவிப்பு

பிரயாக்ராஜ்:உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில், 'ராம் நாம் வங்கி' என்ற பெயரில், ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது. வங்கி என்ற பெயர் இருந்த போதும், இதற்கென ஏ.டி.எம்., கிடையாது; காசோலையும் கிடையாது. இந்த வங்கியின், பரிவர்த்தனை அனைத்துமே, 'ராம நாமம்' தான். இந்த வங்கியில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர், உறுப்பினர்களாக உள்ளனர். பிரயாக்ராஜில், கடந்த ஜன., 15 - மார்ச், 4 வரை ,கும்பமேளா நடந்தது. அப்போது, அயோத்தி பிரச்னையில் சுமுகமான தீர்வு ஏற்பட, ஒரு லட்சம் ராம நாமம் எழுதி பிரார்த்னை செய்ய, வங்கியின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

தற்போது, அயோத்தி வழக்கில் சுமுகமான தீர்ப்பு கிடைத்திருப்பதால், 1.25 லட்சத்துக்கு மேல் நாம நாமம் எழுதியவர்களுக்கு விழா எடுக்க இருப்பதாக, ராம் நாம் வங்கியின் நிர்வாக குழு தெரிவித்தது. இது தொடர்பாக, நிர்வாகக் குழு உறுப்பினர் குஞ்சன் வர்ஷினி கூறியதாவது:வங்கி சார்பில், ராம நாம எழுதுவதற்காக, புத்தகம் வெளியிடப்பட்டது. இதில் தினமும், 108 முறை ராமநாமம் எழுதி, தங்கள் பெயரில், வங்கியில், டிபாசிட் செய்ய வேண்டும் என, கேட்டுக் கொள்ளப்பட்டது.இதில், ஆர்வத்துடன் பக்தர்கள் பங்கேற்றனர்.

மேலும், இதற்காக, மொபைல் செயலி ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது.அயோத்தி தீர்ப்பு வெளியாகும் வரை, ராம நாமம் எழுதி அனுப்பலாம் என, கூறப்பட்டது. 1.25 லட்சத்துக்கு மேல், ராம நாமம் எழுதியவர்களுக்கு, 'போனஸ்' வழங்க, வங்கி முடிவு செய்துள்ளது. அலகாபாதில் அடுத்தஆண்டு நடக்கும், மகா மேளாவின் போது, 1.25 லட்சத்துக்கு மேல் ராம நாமம் எழுதியவர்களுக்கு, பாராட்டு விழா நடத்தப்படும். அவர்களுக்கு, பொன்னாடை அணிவித்து, சான்றிதழ் மற்றும் தேங்காய் வழங்கப்படும். ஒரு கோடிக்கு மேல் ராம நாமம் எழுதியவர்களுக்கு, மகா மேளாவில் தங்குவதற்கு, இடவசதி செய்து கொடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

அயோத்தி தீர்ப்பு: நீதிபதி பெருமிதம்

ஆமதாபாத்:'ஐந்து நீதிபதிகளின் கடின உழைப்பால், அயோத்தி வழக்கு விசாரணை, 40 நாட்களில் நடத்தப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது,'' என, உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா கூறினார். குஜராத் மாநிலம், ஆமதாபாதில் உள்ள, நிர்மா பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

வழக்குகள் தேங்குவதும், நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதமும் தான், நீதித்துறை இன்று சந்திக்கும் பெரும் சவால்களாக உள்ளன. எனினும், நீதிபதிகளின் கடின உழைப்பால், சிறப்பான தீர்ப்புகளும் வெளியாகியுள்ளன. இதற்கு சரியான உதாரணம், அயோத்தி தீர்ப்பு.இந்த வழக்கை, 40 நாட்களில் விசாரித்து, அதன் பின், 22 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, தீர்ப்பு வழங்கிய ஐந்து நீதிபதிகளும் மேற்கொண்ட கடின உழைப்பை, யாராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

அயோத்தி வழக்கில், அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ள கூடிய வகையில், தீர்ப்பு வழங்குவது எளிதல்ல. எந்த வழக்கிலும், நீதி நிலைக்க வேண்டும் என்பதே நீதிபதிகளின் நோக்கமாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார். முக்கிய மனுதாரர் எதிர்ப்புஅயோத்தி வழக்கில், முஸ்லிம்கள் தரப்பில், முக்கிய மனுதாரராக கருதப்படுபவர், இக்பால் அன்சாரி. இவர் தந்தை தொடர்ந்த வழக்கை, அவரது மறைவுக்கு, அன்சாரி நடத்தி வந்தார்.

இந்நிலையில், அயோத்தி வழக்கில், சீராய்வு மனு தேவையில்லை என, அன்சாரி தெரிவித்து உள்ளார். அவர் மேலும் கூறியதாவது:அயோத்தி வழக்கில், சீராய்வு மனு தாக்கல் செய்வதால், தீர்ப்பு மாறி விடாது. ஆனால், சமூகத்தின் அமைதி கெடும். அயோத்தி பிரச்னையில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை, அனைவரும் மதித்து ஏற்க வேண்டும். இந்த பிரச்னையை, மேலும் இழுத்தடிப்பது தேவையற்றது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (14+ 37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
AYYA - Chennai,இந்தியா
18-நவ-201920:20:07 IST Report Abuse
AYYA //அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம், ஷரியத் சட்டப்படி, அல்லாவுக்கு சொந்தமானது. // அட பாவிகளா பாரத திருநாட்டின் இடம் உங்க குல்லாவுக்கு சாரி.. அல்லாவுக்கு சொந்தமா? இவர்களை இப்படியே வளர்த்து விட்டால் மிக ஆபத்து. 5 ஏக்கர் கொடுத்ததை வன்மையாக கண்டிக்கிறோம்.
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
18-நவ-201919:09:31 IST Report Abuse
bal நாட்டை விட்டு ஒடுங்க...
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
18-நவ-201919:06:20 IST Report Abuse
bal இவனுகள நாட்டை விட்டு அடிச்சு துரத்துங்க..நம் நாட்டை ஆக்ரமித்து நம் இனத்தை அழித்த பாபருக்கு இவனுக ஏன் தூபம் போடுறானுக...இவனுங்க தனி சட்டம் உள்ளதால் அது சட்ட விரோதம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X