பொது செய்தி

இந்தியா

பாரத் பெட்ரோலியம் பங்குகள் மார்ச்சுக்குள் விற்பனை செய்ய இலக்கு

Updated : நவ 19, 2019 | Added : நவ 17, 2019 | கருத்துகள் (39)
Advertisement
பாரத் பெட்ரோலியம் ,பங்குகள், மார்ச்சுக்குள், விற்பனை, செய்ய இலக்கு

புதுடில்லி:''கடனில் தத்தளிக்கும், 'ஏர் இந்தியா' மற்றும் பி.பி.சி.எல்., எனப்படும், 'பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்'டின் பங்குகள், 2020, மார்ச் மாதத்துக்குள் விற்பனை செய்யப்படும்,'' என, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
'ஏர் இந்தியா' எனப்படும், பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனம், 58 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. இதில், மத்திய அரசு, 100 சதவீத பங்குகளை வைத்துள்ளது.


ஒப்பந்தம்இதில், 76 சதவீதத்தை விற்பதற்கு முயற்சிகள் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டு இதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டது.பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் சில இந்திய நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. ஆனால், பங்குகளை வாங்குவதற்கு முன்வரவில்லை.'மத்திய அரசின் பங்கு, 24 சதவீதம் இருப்பதால், அரசின் தலையீடு இருக்கும் என விமான நிறுவனங்கள் அச்சப்படுகின்றன' என, விமானத் துறையில் ஆலோசனை வழங்கும் நிறுவனம் கூறியது.

அதையடுத்து, அந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. தற்போது, ஏர் இந்தியா பங்குகளை விற்பதற்கான முயற்சி மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிறுவனத்துக்கு கடந்த நிதியாண்டில், 4,600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. சர்வதேச அளவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்டவை காரணமாக, இந்த இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் லாபம் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அரசின் பங்குகளை விற்பதில் இருந்த சில சிக்கலான நடைமுறைகளும் மாற்றப்பட்டுள்ளன.பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான, பி.பி.சி.எல்.,லில் உள்ள அரசின், 53.29 சதவீத பங்குகளை விற்பதற்கு, மத்திய அரசின் செயலர்கள் குழு ஒப்புதல் அளித்து உள்ளது.


நம்பிக்கை

இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு, 1.02 லட்சம் கோடி ரூபாய்.இதில், மத்திய அரசின் பங்குகளை விற்பதன் மூலம், 65 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட, அரசு திட்டமிட்டு உள்ளது.இந்த நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன் கூறியதாவது:ஏர் இந்தியா மற்றும் பி.பி.சி.எல்., பங்குகள் விற்பனை தொடர்பான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. வரும் 2020, மார்ச் மாதத்துக்குள் இவை முடியும் என, நம்பிக்கையுடன் உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mothibaba - Prayagraj,இந்தியா
21-நவ-201917:21:42 IST Report Abuse
mothibaba இப்படியே போனால் ஒரு நாள் நாம் அனைவரும் அடிமைகள் ஆவது உறுதி. ஒரே தேசம் ஒரே தலைவர் ஒரே முதலாளி.
Rate this:
Share this comment
Cancel
M.SHANMUGA SUNDARAM - TUTICORIN,இந்தியா
21-நவ-201917:05:02 IST Report Abuse
M.SHANMUGA SUNDARAM பொதுத்துறை நிறுவனங்கள் படிப்படியாக பல காலங்களாக நிறுவப்பட்டவை. நாட்டின் வளர்ச்சி. மக்களின் நலன் இவற்றை கருத்தில் கொண்டு உருவாக்க பட்டவை. தனியார் துறைகளில் இருந்து பொதுத்துறை உருவானது. இன்று பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்க்கிறார்கள். பணத்தேவைகளுக்காக கஷ்டப்பட்டு உருவாக்கிய துறைகளை விற்கிறார்கள். எல்லாம் விற்று முடித்து விட்டால், மக்கள் தலையில் கை வைப்பார்கள். இதுதான் இன்றைய அரசின் பொருளாதாரம். நெஞ்சு பொறுக்கவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Naren - Chennai,இந்தியா
18-நவ-201922:16:44 IST Report Abuse
Naren ஒரு சமயம் உலக நாடுகள் முழுவதும் மிக பெரிய பொருளாதார தேக்க நிலை ஏற்பட்ட பொழுது கூட நாம் அதனால் பெரிதாக பாதிக்க படாமல் இருக்க முக்கிய காரணம் மக்கள் சேமிப்பு நிதிகள், RBI வங்கிகளில் மிகையான வைப்பு நிதி, பொது துறை நிறுவனங்களின் வருவாய். இந்தியாவின் வலிமையே இவைகள்தான். அதன் அடித்தளத்தை அசைக்கும் வண்ணம் இன்றைய அரசின் பொருளாதார சீர்திருத்தங்கள் உள்ளன. அரசுத்துறை நிறுவனங்கள் தனியார் கைகளில் ஒப்படைத்தால் அரசின் தேவைகளுக்கு மக்களிடம் மித மிஞ்சிய வரி வசூல் என கசக்கி பிழிய வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும். நாட்டின் போக்குவரத்துக்கு முக்கிய காரணிகளாக விளங்கும் எரிபொருட்கள், ரயில் மற்றும் விமான போக்குவரத்து தனியார் வசம் சென்றால் அரசு தனியார் நிறுவனங்களை முற்றிலும் நம்பியிருக்க வேண்டிய சூழ் நிலை உருவாகும். தனியார் நிருவனங்கள் நினைத்தால் அரசை செயல்பட விடாமல் ஸ்தம்பிக்க செய்ய முடியும் சூழ் நிலை உருவாகிவிடும். அவர்களிடம் வரி வசூலித்தலில் அரசு கெடுபிடிகள் காட்ட முடியாது. இனி வரும் காலங்களில் மாறும் எந்த அரசாக இருந்தாலும் அவர்கள் சொல்லும்படி கேட்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இவை நாட்டின் இறையாண்மைக்கு மிகவும் ஆபத்தானது. அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை இந்திய போன்ற ஜனத்தொகை அடர்த்தி மிகுந்து உள்ள நாடுகளுக்கு ஏற்றதல்ல. கார்ப்பரேட் பொருளாதார நிபுணர்கள் ஆலோசனைகளை வேதவாக்காக செயல் படுத்த வேண்டிய அவசியமில்லை. பொதுத்துறை நிறுவனங்களை லாபத்தில் இயங்க வைக்கவும், மக்களிடம் பண புழக்கம் இருக்குமாறும் பார்த்து கொள்வதே இப்பொழுது அரசின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். மாறாக இதுபோன்ற முரணான முடிவுகள் ஆரம்பத்தில் கை கொடுப்பது போல் தோன்றினாலும் நீண்ட காலங்களுக்கு பயனளிக்காது மேலும் எதிர்கால சிக்கல்களுக்கு இன்றே அடிகோலுவது போன்றதாகும். அரசு சிந்தித்து செயல் படவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X