பட்னவிசை முற்றுகையிட்ட சிவசேனாவினர்: மும்பையில் பால் தாக்கரே நினைவிடத்தில் பரபரப்பு

Updated : நவ 19, 2019 | Added : நவ 17, 2019 | கருத்துகள் (12)
Advertisement

மும்பை:பால் தாக்கரே நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த வந்த மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிசை முற்றுகையிட்டு, சிவசேனா தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது.

மஹாராஷ்டிராவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சியாக இருந்த சிவசேனாவுக்கு, தனிப் பெரும்பான்மை கிடைத்தும், கருத்து வேறுபாடுகளால் ஆட்சி அமைக்க முடியவில்லை.அதிருப்திமுதல்வர் பதவியை தங்களுக்கு ஒதுக்கும்படி, சிவசேனா பிடிவாதம் பிடித்ததால், பா.ஜ., தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து, பா.ஜ., - சிவசேனா கூட்டணி முறிந்தது. காங்கிரஸ், தேசியவாத காங்., ஆதரவுடன் ஆட்சி அமைக்க, சிவசேனா மேற்கொண்ட முயற்சியும் கைகூடவில்லை. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையே, ஆட்சி அமைப்பது தொடர்பாக, காங்., மற்றும் தேசியவாத காங்., தலைவர்களுடன், சிவசேனா தலைவர்கள் மீண்டும் பேச்சு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் எட்டாவது நினைவு நாள், நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, மும்பை சிவாஜி பார்க்கில் உள்ள அவரது நினைவிடத்தில், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான தேவேந்திர பட்னவிஸ், கட்சி பிரமுகர்களுடன் அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த சிவசேனா தொண்டர்கள், அவரை முற்றுகையிட்டு, கோஷங்களை எழுப்பினர்.'மஹாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமையும்; பட்னவிஸ் கனவு பலிக்காது' என, அவர்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பட்னவிசும், அவருடன் வந்த பா.ஜ., தலைவர்களும், பால் தாக்கரே நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின், வேகமாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.


பின்னடைவுஅதற்கு சற்று முன்னதாகத் தான், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும், அவரது குடும்பத்தினரும், அஞ்சலி செலுத்தி விட்டு, அங்கிருந்து சென்றிருந்தனர். பட்னவிஸ் வந்தபோது, உத்தவ் தாக்கரேவின் உதவியாளர், மிலிந்த் நர்வேர்கர் மட்டுமே அங்கிருந்தார்.இந்த சம்பவத்தால், பா.ஜ., - சிவசேனா இடையேயான உறவு, மேலும் பின்னடைவைச் சந்தித்து உள்ளது.இதற்கிடையே, மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக, சிவசேனா, காங்., தேசியவாத காங்., தலைவர்கள் நேற்றும் தொடர்ந்து ஆலோசனை நடத்தினர்.


'சிவாஜி அனைவருக்கும் சொந்தம்'சிவசேனா மூத்த தலைவரான சஞ்சய் ராவத், கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான, 'சாம்னா'வில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:வீர சிவாஜி மகாராஜா, மஹாராஷ்டிராவில் உள்ள, 11 கோடி மக்களுக்கும் சொந்தமானவர். எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர், கட்சியினர் மட்டும், அவரை சொந்தம் கொண்டாட முடியாது. சிவாஜியின் வம்சாவளியைச் சேர்ந்த உதயன்ராஜ் போசாலே, பா.ஜ.,வில் சேர்ந்து விட்டார் என்பதற்காக, சிவாஜியை, பா.ஜ.,வினர் மட்டும் சொந்தம் கொண்டாடுவது சரியல்ல. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani -  ( Posted via: Dinamalar Android App )
18-நவ-201921:33:23 IST Report Abuse
Mani Shivsena is nothing in MH without BJP in political front
Rate this:
Share this comment
Cancel
அருண் பிரகாஷ் - சென்னை,இந்தியா
18-நவ-201916:12:00 IST Report Abuse
அருண் பிரகாஷ் பாஜக சார்பாக முன்னாள் முதல்வர் வந்து மரியாதை செய்து விட்டு போனார்.. இப்போ புது கூட்டணி சார்பாக யாரும் வரவில்லை போல. நான் கூட சிவசேனா கொஞ்சம் தன்மானம் உள்ள கட்சினு நினைச்சேன்.இவனுங்க மாதிரி பதவிக்காக மதிக்காதவன் காலில் விழுவதால்தான் ஹிந்துக்கள் மேல் உள்ள மதிப்பு கெட்டு போகிறது..சுய மரியாதை,தன்மானம் போன்றவற்றை விட பதவி பெரிது என்று நடக்கிறார்கள்.கட்சிக்கு மூடுவிழா கொஞ்ச காலத்தில் நடக்கும்..ஆச்சர்யமான விஷயம் வர வர தாக்கரே குடும்பத்தை சார்ந்த அரசியல்வாதிகள் பொட்டு வைக்க கூட தயக்கம் கொள்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Ram Sekar - mumbai ,இந்தியா
18-நவ-201915:11:47 IST Report Abuse
Ram Sekar இன்றைய சிவ சேனா மகாராஷ்டிராவின் "தி.மு.க." - மிக பொருத்தம். அதுவும் உதயநிதி மற்றும் சிவசேனாவின் ஆதித்ய தாக்கரே ரெண்டு நேரும் அவ்வளோ பொருத்தமோ பொருத்தம்
Rate this:
Share this comment
Endrum Indian - Kolkata,இந்தியா
18-நவ-201917:01:42 IST Report Abuse
Endrum Indian100 % சரி....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X