மீண்டும் டிரம்ப் ஆட்சியா? ஜோ பிடன் எச்சரிக்கை

Added : நவ 18, 2019
Share
Advertisement
லாஸ் வேகாஸ்:அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில், லாஸ் வேகாசில் நடந்த பிரசாரக் கூட்டத்தில், ஜனநாயகக் கட்சியின் சார்பில் பேசிய அதிபர் வேட்பாளருக்காக போட்டியிடும் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன், மக்களை எச்சரித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல், அடுத்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. அதற்கு முன், பல்வேறு மாகாண தேர்தல்கள் நடந்து வருகின்றன.
 மீண்டும் டிரம்ப் ஆட்சியா?  ஜோ பிடன் எச்சரிக்கை

லாஸ் வேகாஸ்:அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில், லாஸ் வேகாசில் நடந்த பிரசாரக் கூட்டத்தில், ஜனநாயகக் கட்சியின் சார்பில் பேசிய அதிபர் வேட்பாளருக்காக போட்டியிடும் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன், மக்களை எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல், அடுத்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. அதற்கு முன், பல்வேறு மாகாண தேர்தல்கள் நடந்து வருகின்றன. அதன் பிறகு, கட்சிகளின் சார்பில் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்யும் தேர்தல் நடக்கும்.நவாடா மாகாணத்தில் விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், முன்னாள் துணை ஜனாதிபதியும், ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிப்பதற்காக போட்டியிடும் ஜோ பிடன், பிரசாரம் செய்து வருகிறார்.
பிரசாரத்தில் அவர் பேசியதாவது:டிரம்ப், 73, அதிபராக இருக்கும் வரை, நாட்டின் பாதுகாப்பும், எதிர்காலமும் கேள்விக்குறியே. அவர் பதவியில் இருக்கும் வரை, நாடு குறித்து நம்முடைய கவலை மற்றும் அக்கறை, பிரச்னைகள் அனைத்துக்கும் தீர்வு காண்பதற்கு சாத்தியமில்லை. அதனால், நாட்டின் எதிர்காலத்தை மக்களே தீர்மானிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
இதற்கிடையே, அதிபர் டொனால்டு டிரம்புக்கு, வாஷிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நேற்று திடீரென மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. 'இது வழக்கமான ஒரு பரிசோதனை தான்' என, அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X