அரசியல் செய்தி

தமிழ்நாடு

இட ஒதுக்கீடு பலன் தடையின்றி கிடைக்க வேண்டும்: ஸ்டாலின்

Updated : நவ 18, 2019 | Added : நவ 18, 2019 | கருத்துகள் (55)
Share
Advertisement
 இட ஒதுக்கீடு பலன். தடையின்றி. கிடைக்க. வேண்டும்: ஸ்டாலின்

சென்னை:'இட ஒதுக்கீட்டின் பலன் அனைவருக்கும் தடையின்றி கிடைக்கவும் சமூக நீதி முழுமையாக நிலைநாட்டவும் அ.தி.மு.க. அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழக அரசு ஊழியர்களின் பணி நிபந்தனைச் சட்டத்தில் உள்ள சில பிரிவுகளுக்கு எதிராக நடந்த வழக்கில் பணிமூப்புக் கொள்கையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது அ.தி.மு.க. அரசிற்கு கிடைத்த சட்டத் தோல்வி.இதனால் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் பதவி உயர்வுகளும் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கிடைக்க வேண்டிய சமூக நீதியின் முழுப் பயனும் பேராபத்திற்கு உள்ளாகி உள்ளன.

போதிய தகவல்கள் தேவையான ஆதாரங்கள் அடிப்படையில் இந்தச் சட்டம் எடுத்து வரப்படவில்லை. மாறாக அவசர கதியில் கொண்டு வரப்பட்டுள்ளது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.எனவே தமிழக அரசு மூத்த வழக்கறிஞர்களின் சட்ட ஆலோசனைகளைப் பெற்று 69 சதவீத இடஒதுக்கீட்டின் பலன் அனைத்து இட ஒதுக்கீட்டு பயனாளிகளுக்கும் தடையின்றி கிடைக்கவும் சமூக நீதி முழுவதும் நிலைநாட்டப்படவும் அ.தி.மு.க. அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
கால் இழந்த பெண்ணுக்குநிதி வழங்கி

கோவையில் விபத்தில் சிக்கி இடது கால் அகற்றப்பட்ட பெண்ணை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.

கோவை சிங்காநல்லுாரைச் சேர்ந்த நாகநாதன் மகள் ராஜேஸ்வரி 31. தனியார் நிறுவன ஊழியர். 11ம் தேதி டூவிலரில் அவிநாசி ரோடு வழியாக சென்றார். கோல்டுவின்ஸ் அருகே பின்னால் வந்த லாரி மோதி ராஜேஸ்வரி காயமடைந்தார்.அ.தி.மு.க. கொடிக்கம்பம் சாலையில் சாய்ந்ததால் விபத்து நேரிட்டதாக புகார் எழுந்தது. லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். தனியார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரிக்கு இடது கால் அகற்றப்பட்டது.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேற்று மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்ட பெண் அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். கட்சி சார்பில் ரூ. 5 லட்சம் காசோலை வழங்கினார்.
ஸ்டாலின் கூறியதாவது:முதல்வர் பழனி சாமியை வரவேற்க வைக்கப்பட்ட கொடிக் கம்பம் சாய்ந்ததால் பின்னால் வந்த லாரி மோதி ராஜேஸ்வரி படுகாயம் அடைந்துள்ளார். இது குறித்து முதல்வரிடம் கேட்டால் சம்பவம் குறித்து தெரியாது என அலட்சியமாக கூறியிருப்பது வேதனைக்குரியது. பெண்ணின் மருத்துவ செலவை அரசு ஏற்க வேண்டும்.

கொடி நட்ட அ.தி.மு.க.வினர் மீது வழக்குப் பதியாமல் லாரி டிரைவர் மீது வழக்குப் பதிந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை முடிந்து செயற்கை கால் பொருத்த ஆகும் செலவை தி.மு.க. ஏற்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. முன்னாள் அமைச்சரான மறைந்த ஆறுமுகத்தின் 'திராவிட இயக்க வரலாற்றில் என் பயணம்' நுால் வெளியீட்டு விழா சேலத்தில் நேற்று நடந்தது. இதில் ஸ்டாலின் பேசுகையில் ''சில நாட்களாக மிசா பற்றிய சர்ச்சை திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. ஊடகங்கள் எதை விவாதிக்க வேண்டும் என்ற விவஸ்தை இல்லாமல் போய்விட்டது. நான் மிசாவில் கைது செய்யப்பட்டேனா என்பது தான் தலைப்பு. அடுத்து ஸ்டாலின் தி.மு.க.வை சேர்ந்தவரா என்று கூட விவாதிப்பர். இந்தியாவில் நெருக்கடி நிலையை முதலில் எதிர்த்தது தி.மு.க. தான்'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-நவ-201920:35:05 IST Report Abuse
ஆப்பு இட ஒதுக்கீட்டில் திமுக தலைவர் பதவியை யாருக்காவது குடுத்துருங்களேன் தல.
Rate this:
Share this comment
Cancel
மோகன் - லண்டன்,யுனைடெட் கிங்டம்
18-நவ-201920:34:13 IST Report Abuse
மோகன் //சமூக நீதி முழுமையாக நிலைநாட்டவும் // இந்த வார்த்தைகளை பயன்படுத்தக்கூட இவருக்கு அருகதை இல்லை.
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
18-நவ-201919:29:47 IST Report Abuse
bal இன்னும் எதனை காலம் இந்த சாதி அரசியல் பண்ணுவீங்க
Rate this:
Share this comment
chenar - paris,பிரான்ஸ்
19-நவ-201913:52:24 IST Report Abuse
chenarஉங்கள் சாதி இருக்கும் வரை ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X