சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

பக்க வாத்தியம்

Added : நவ 18, 2019 | கருத்துகள் (1)
Advertisement
பக்க வாத்தியம்

'தி.மு.க.,வுல, 'உள்ளடி வேலை' செய்றாங்களா!'

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட, தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், மாவட்ட செயலர்
சிவானந்தம் தலைமையில், ஆரணியில் நடந்தது.
எம்.எல்.ஏ.,க்கள், அம்பேத்குமார், சேகரன்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.'மாஜி' அமைச்சர் எ.வ.வேலு, 'உள்ளாட்சி தேர்தலை, அ.தி.மு.க., நடத்தாததால், தமிழகத்திற்கு வர வேண்டிய, 6,000 கோடி ரூபாய் நிதி, மத்திய அரசுக்கு திரும்பி சென்றுள்ளது. இதனால், மக்கள், அ.தி.மு.க., ஆட்சி மீது, கோபத்தில் உள்ளனர். தமிழகத்தில், அரசியல் வெற்றிடத்தை, தலைவர் ஸ்டாலின் எப்போதோ நிரப்பி விட்டார்.

'கூட்டுறவு சங்க தேர்தலில், அ.தி.மு.க.,வினர் முறைகேடு செய்து, பெயர் பட்டியலை வெளியிட்டது போல், உள்ளாட்சி தேர்தலிலும் முறைகேட்டில் ஈடுபட வாய்ப்புள்ளது. உள்ளாட்சி தேர்தலில், துரோகம் செய்து, தி.மு.க., வேட்பாளரை தோற்கடிக்க செய்யும் நிர்வாகிகள், உடனடியாக கட்சியை விட்டு, கட்டம் கட்டப்படுவர்' என்றார்.
கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், 'உள்ளடி வேலை செய்றவங்க, கட்சிக்குள் இருப்பதை, வேலு காட்டி விட்டாரே' என, 'கமென்ட்' அடிக்க, தொண்டர்கள், 'எல்லா கட்சியிலும் உள்ளது தானே' என்றபடி நடையை கட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
18-நவ-201905:51:02 IST Report Abuse
D.Ambujavalli கட்சியைக் குடும்பம் தான் ஆளவேண்டும், தொண்டன் போஸ்டர் ஒட்டி, கூட்டத்தில் கோஷமிட்டால் போதும் என்றிருந்தால் சமயம் பார்த்து காலை வாராமல் என்ன செய்வார்கள் கழகமும், தொண்டர்களும் கைவிட்டுப்போக ‘கிச்சன்’ ஆலோசனையை ஏற்று மகனைத் தூக்கிப் பிடித்ததுதான் காரணம் என்று உணருமுன் நிலைமை கைமீறிப் போய்விடும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X