பொன்னேரி: பாதுகாப்பற்று திறந்த நிலையில் கிடக்கும் கிணற்றால், அசம்பாவிதங்கள் நேரிடும் வாய்ப்பு உள்ளதுடன், தமிழக அரசின் உத்தரவு காற்றில் பறக்கிறது.
மீஞ்சூர் ஒன்றியம், சேகண்யம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு சேகண்யம் கிராமத்தில், பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது.திறந்த நிலையில் இருப்பதால், ஆடு, நாய்கள் இதில் தவறி விழுந்து இறந்து உள்ளன. இந்த கிணறு, சாலையை ஒட்டி உள்ளதால், அவ்வழியாக செலலும் குழந்தைகள் ஆர்வத்தில், அதை எட்டிப் பார்த்து செல்கின்றனர்.சமீபத்தில், திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்து குழந்தை இறந்த துயர சம்பவத்தை தொடர்ந்து, தமிழக அரசு, இதுபோன்ற திறந்த நிலைகிணறுகளை பாதுகாப்பாக மூட உத்தரவு பிறப்பித்தது.தமிழக அரசின் உத்தரவு காற்றில் பறக்கும்விதமாக மேற்கண்ட கிராமத்தில் உள்ள கிணற்றால், அசம்பாவிதங்களுக்கு வாய்ப்பு உருவாகி உள்ளது. இதனால் கிராமவாசிகள் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர்.கிராமவாசிகள், பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம், பாதுகாப்பற்று கிடக்கும் கிணற்றினை மூட வலியுறுத்தியும், நடவடிக்கை இன்றி கிடக்கிறது.அசம்பாவிதங்கள் நேரிடும் முன், மேற்கண்ட கிணற்றினை, மழை நீர் சேமிப்பு தொட்டியாக மாற்றி, மேற்பகுதியை பாதுகாப்பாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE