கவனக்குறைவால் மரணம்!

Added : நவ 18, 2019 | கருத்துகள் (2)
Advertisement
swim,friends,video,நீச்சல்,நண்பர்கள்,கவனக்குறைவு,மரணம்

பெங்களூரு: கர்நாடகாவில் கல்புர்கி மாவட்டத்தின் புறநகர் பகுதியிலுள்ள கல்குவாரி குட்டை ஒன்றில் இளைஞர்கள் சிலர் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அங்கு குளித்து முடித்தபின், ஜாபர் என்ற இளைஞர் கரைக்கு நீந்தி வர முயற்சித்துள்ளார். ஆனால் நீந்த இயலாததால் அவர் தத்தளிக்க, கரையில் இருந்த அவருடைய நண்பர்கள் அவரைப் பார்த்து சிரித்துள்ளனர்.

பின்னர் நொடியில் தான் மூழ்குவதை உணர்ந்த ஜாபர் தண்ணீருக்கு வெளியே கைகளை நீட்டி நண்பர்களிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால் அவருடைய நண்பர்கள் அப்போதும் ஜாபருக்கு உதவாமல் அவர் நீருக்குள் மூழ்குவதை வீடியோ எடுத்துக்கொண்டிருந்துள்ளனர். இதையடுத்து நீரில் மூழ்கிய ஜாபர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். போலீசார் ஜாபரின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், நண்பர்களின் போனில் இருந்த வீடியோவிலிருந்து மேற்கண்ட தகவல்களை உறுதி செய்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
18-நவ-201907:33:45 IST Report Abuse
skv srinivasankrishnaveni அடப்பாவிகளா அப்படி என்ன செல்போன் மோகம் உசிரைவிடவா வீடியோ முக்கியம் வெட்க்கமாஇல்லீயா உன்னைபோலவேதாண்டா அவனும் நீச்சல் தெரியாம மாட்டிண்டுருக்கானே இந்தமாதி இளம் அரக்கர்களிடம் செல்போன் இருக்கவேகூடாது எதுலேயும் அளவுக்குமீறினால் அழிவுதான் புரிஞ்சுதா பாவம் ஏவா பெற்றபிள்ளையோ பல தாய்மார்கள் தங்கள் பிள்ளைகள் கைலே போன் தரத்துக்கு யோசிக்கும் நிலை லே இருக்காங்க இதனாலேதான் போல இருக்கே
Rate this:
Share this comment
Kundalakesi - Coimbatore,இந்தியா
18-நவ-201907:52:37 IST Report Abuse
Kundalakesiஅந்த மூன்று பேரும் மப்ப போட்டுட்டு குளிச்சிருக்காங்க. அதான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X