பொது செய்தி

இந்தியா

தமிழக அரசின் இலவச சேலைகள்; தள்ளுபடியில் விற்பனை

Updated : நவ 18, 2019 | Added : நவ 18, 2019 | கருத்துகள் (15)
Advertisement
TN, Tamil Nadu, தமிழ்நாடு, தமிழகம், ஆந்திரா, தமிழக அரசு, இலவச சேலைகள், தள்ளுபடி, விற்பனை

இந்த செய்தியை கேட்க

திருப்பதி: தமிழக அரசின் இலவச சேலைகள், ஆந்திராவில் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள பல்வேறு நகரங்களில், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த, சி.எம்.ஆர்., என்ற நிறுவனத்திற்கு சொந்தமாக, மால்கள் எனப்படும், வணிக வளாகங்கள் உள்ளன. இந்த வணிக வளாகங்களில், ஜவுளி, தங்கம், வெள்ளி ஆபரணங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிறுவனத்திற்கு சொந்தமான துணிக்கடைகளில், தமிழக அரசு சார்பில், ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் சேலைகள், தள்ளுபடி விலை என்ற அறிவிப்புடன், விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.





தமிழகத்தில், ரேஷன் அட்டை பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இந்த இலவச சேலைகளில், அதிகபட்ச சில்லரை விலையாக, 196 ரூபாய் என, குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சேலைகள், தள்ளுபடி போக, 98 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல, 146 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்ட, இன்னொரு ரகத்தைச் சேர்ந்த சேலைகள், 38 ரூபாய் தள்ளுபடி போக, 108 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

தமிழகத்தில், மக்களுக்கு வழங்கபட்ட இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்டவை, சில ஆண்டுகளுக்கு முன், ஆந்திர மாநிலத்தின் சாலை ஓரங்களில், கூவி கூவி விற்கப்பட்டன. அந்த வரிசையில், தற்போது சேலைகளும் இணைந்து உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-நவ-201919:40:34 IST Report Abuse
ஆப்பு பெங்களூரில் மூலைக்கு மூலை கடை போட்டு இந்த சேலைய்ங்களை 150 ரூவாய்க்கு விக்கிறாங்க. கண்ணைப் பறிக்குது. தரமாகவும் இருக்குது. எல்லோரும் வாங்கி பயன் படுத்துங்கோ...
Rate this:
Share this comment
Cancel
18-நவ-201916:20:30 IST Report Abuse
ஆப்பு எல்லோரும் நல்லா இருக்காங்க. தமிழகத்தில் மிக்சியும், கிரண்டரும், சேலையும் பெருக்கெடுத்து ஓடுகின்றன. ஏழை எளியமக்கள் ஸ்விக்கி, சொமாட்டோவில் ஆர்டர் செஞ்சு வயிறார சாப்பிடுடறாங்க. மேல் செலவுக்கு அரசே பணம் வங்கிக் கணக்குல வைக்குது. இதயக்கனி எம்.ஜி.ஆர் ஆட்சி நடக்குது. கஜானாவும் ரொம்பி வழியுது.
Rate this:
Share this comment
Cancel
Naren - Chennai,இந்தியா
18-நவ-201913:35:02 IST Report Abuse
Naren ஒவ்வொருவருக்கும் தனி தனியாக வழங்கப்பட்ட இலவச சேலைகளை இதுபோல் சேகரித்திருக்க முடியாது. இது அந்த அரசு பணியில் உள்ளவர்கள் கைங்கரியமாகவே இருக்க முடியும். பதவியை தவறாக பயன் படுத்தியவர்களை கண்டுபிடித்து நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X