பொது செய்தி

தமிழ்நாடு

இ.பி.எஸ்., கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்: ரஜினி

Updated : நவ 18, 2019 | Added : நவ 18, 2019 | கருத்துகள் (107)
Share
Advertisement
சென்னை: 'முதல்வர் ஆவேன் என இ.பி.எஸ்., கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்; அதிசயங்கள் நாளையும் நடக்கும்' என கமல்ஹாசனுக்கு நடந்த பாராட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் நேற்று, மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் நடிகருமான கமல் திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதையொட்டி 'கமல் 60' நிகழ்ச்சி நடந்தது. இதில் திரைத்துறையினர்
#Kamal60,#UngalNaan,Rajini,Rajinikanth,ரஜினி,ரஜினிகாந்த்,கமல்,கமல்ஹாசன்,Kamal,Kamal Haasan,

இந்த செய்தியை கேட்க

சென்னை: 'முதல்வர் ஆவேன் என இ.பி.எஸ்., கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்; அதிசயங்கள் நாளையும் நடக்கும்' என கமல்ஹாசனுக்கு நடந்த பாராட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் நேற்று, மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் நடிகருமான கமல் திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதையொட்டி 'கமல் 60' நிகழ்ச்சி நடந்தது. இதில் திரைத்துறையினர் பலர் கலந்து கொண்டனர். அதில் தமிழகம் முழுவதும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை ஏற்படுத்த கமல் சார்பில் 1கோடி ரூபாயை கமலும் ரஜினியும் இணைந்து வழங்கினர்.


latest tamil news




latest tamil news



நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: முதல்வர் ஆவேன் என எடப்பாடி பழனிசாமி, 2 ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். பழனிசாமி ஆட்சி, 4 அல்லது 5 மாதங்களில் கவிழ்ந்து விடும் என 99 சதவீத மக்கள் கூறினார்கள். ஆனால் அற்புதம் நடந்தது. அனைத்து தடைகளையும் மீறி ஆட்சி தொடர்கிறது. அதுமாதிரியான அதிசயம், நேற்று நடந்தது; இன்று நடக்கிறது; நாளையும் நடக்கும்.


latest tamil news




நட்பு தொடரும்:


கமலும், நானும் வெவ்வேறு இடத்துக்கு போனாலும், எங்களது சித்தாந்தம், கொள்கை மாறினாலும் நட்பு எப்போதும் போல் தொடரும். எங்கள் பெயரை வைத்து ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சி தொடர்பான #Kamal60 ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரண்டானது.

Advertisement




வாசகர் கருத்து (107)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-நவ-201911:53:24 IST Report Abuse
ஜப்பான்நாட்டு துணைமுதல்வர்   சொடலை கண்டக்க்டராக இருந்தவர், பொறுப்பற்ற குடிமகனாக ( போலீசை தாக்குவது, பத்திரிகையாளர்களை தாக்குவது) என்று 70 களில் இருந்த நீங்கள் கூட சூப்பர்ஸ்டார், பத்மபூஷன் விருதுகள் வாங்குவோம் என்றும் கனவிலும் நினைத்திருக்க மாட்டீங்க தானே?
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
19-நவ-201913:19:40 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy முதல்வர் பதவிக்கு சினிமாவில் நாயகனாக நல்லது செய்பவனாக நடித்து, மக்களிடம் நல்ல பெயர் வாங்கி தேர்தலில் நிக்க வேண்டும் என்றால், நடிக்க தெரியாத நாட்டில் என்ன செய்வது. மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கிராம புற மனிதனை அணைத்து தறப்பட்ட மனிதரையும் பார்த்தவரை முதல்வராக பெற்றதே புண்ணியம். நாடு நன்றாக உள்ளது எதற்கு மாற்றம். இன்னும் 6 வருடம் இருக்கட்டும். ஸ்டார் வேண்டாம். மக்கள் வரிப்பணத்தை நன்றாக பயன்படுத்த தெரிந்தோரிடம் ஆட்சி வேண்டும்.
Rate this:
Cancel
Mahmood Jainulabdeen - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-நவ-201907:10:52 IST Report Abuse
Mahmood Jainulabdeen உண்மை தான் ஆனால் தற்போது மக்கள் இதுவரை காணாத சிறப்பான ஆட்சி நடக்கிறது. நீங்கள் (நாற்காலி) கனவு காணாமல் இருந்தால் சரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X