புள்ளிவிபரங்களை மறைக்க மத்திய அரசு முயற்சி : ப.சிதம்பரம்

Updated : நவ 18, 2019 | Added : நவ 18, 2019 | கருத்துகள் (84)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : பொருளாதாரம் தொடர்பான உண்மையான புள்ளி விவரங்களை மறைக்கும் வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.





ஐஎன்எக்ஸ் மீடியாக முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்க தொடர்ந்து கோர்ட் மறுத்து வருகிறது. ஆனால் உடல்நிலையை காரணம் காட்டி, தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என சிதம்பரம் தரப்பில் அடுத்தடுத்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 5 முறை சிதம்பரத்தின் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியல் நிலவரம் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக அவரது தரப்பில் அவரது குடும்பத்தினர் பதிவிடுவதாக கூறி அடிக்கடி பல டுவீட்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.




இதில் நேற்று சிதம்பரம், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பதிவிட்ட டுவீட்டில், "கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு தொடர்பான உண்மை விவரம் மூடி மறைக்கப்பட்டது. அதேபோன்று தற்போது நுகர்வோர் செலவினம் பற்றிய விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளது. இதுதான், மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் நிலை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
19-நவ-201908:37:17 IST Report Abuse
madhavan rajan உங்க கட்சி ஆட்சி காலத்தில் நீங்கள் எவ்வளவு செய்திருக்கிறீர்கள் இதுமாதிரி. அதையும் கொஞ்சம் விவரமாக சொல்லுங்களேன். முதலில் வெளிநாட்டில் உங்கள் குடும்பம் வாங்கியிருக்கும் சொத்து விவரங்களை இந்திய மக்களுக்கு சரியாக தெரியப்படுத்துங்கள். உங்கள் மகன் உங்கள் ஆட்சி காலத்தில் எப்படி பல ஆயிரம் கோடிக்கு அதிபதியானார் என்பதையும் தெரியப்படுத்தினால் இந்திய மக்கள் நன்றி தெரிவிப்பார்கள். மற்றவர் முதுகிலிருக்கும் அழுக்கை வெளிச்சம் போட்டு காட்டும் நீங்கள் உங்கள் முகத்தில் இருக்கும் கரியையும் பார்த்து துடைத்துக் கொள்வது நன்று.
Rate this:
Share this comment
Cancel
Rajas - chennai,இந்தியா
18-நவ-201917:22:05 IST Report Abuse
Rajas பல லட்சம் கோடிக்கு மேல் லஞ்சம், சொத்துக்கள் என்று whatsapp ல் செய்தி பரப்பி விட்டு பிறகு 3.5 கோடி ரூபாய் FIR போட்டு பின்னர் சார்ஜ் ஷீட்டில் 9.60 லட்ச ரூபாய்க்கு வந்திருக்கிறார்கள். உள்ளத்தை அள்ளி தா படம் போல பின்னர் 9 . 60 பைசாவிற்கு வருவார்கள் போலிருக்கிறது. வேன் வைத்து வேறு வரவழைத்து வந்திருக்கிறார்கள். விசாரணையின் போது என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
murali - Chennai,இந்தியா
18-நவ-201916:57:40 IST Report Abuse
murali பைசா பெறாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X