பொது செய்தி

இந்தியா

தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு

Updated : நவ 18, 2019 | Added : நவ 18, 2019 | கருத்துகள் (2)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: உச்ச நீதிமன்றத்தின், 47வது தலைமை நீதிபதியாக, நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே, இன்று (நவ.18) பதவியேற்றார். இவர் 2021 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான 17 மாதங்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.






உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பாப்டே, 63, இன்று பதவியேற்றார்.




மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில், வழக்கறிஞர்கள் குடும்பத்தில் பிறந்தவர், நீதிபதி பாப்டே. இவருடைய தந்தை, அரவிந்த் ஸ்ரீநிவாஸ் பாப்டே, பிரபலமான மூத்த வழக்கறிஞர்.நாக்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்த, எஸ்.ஏ.பாப்டே, உச்ச நீதிமன்றத்தில், 21 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார். மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி, மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி னார், 2013ல், உச்ச நீதிமன்ற நீதிபதியானார்.அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம், தனிமனித சுதந்திரம் உட்பட பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளார். வரும், 2021 ஏப்., 23 வரை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பார்.





இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் பாப்டே பதவியேற்றார். இவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கைய்ய நாயுடு, பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
18-நவ-201912:45:29 IST Report Abuse
J.Isaac சாட்சிகளை சார்ந்து தீர்ப்பு இராமல் மனசாட்சிபடியும் தீர்ப்பு இருக்கவேண்டும் . அரசியல் வாடை வரக்கூடாது
Rate this:
Share this comment
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
18-நவ-201912:05:59 IST Report Abuse
S.P. Barucha நேர்மையாக, திறமையாக, அரசியல் சாய்வு இல்லாமல், இந்திய நீதிமன்றத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், நீதிபதிகள் கண்ணா,எஸ்.பி. பரூச்சா போன்ற நீதிபதிகள் போல செயல்பட வேண்டும். வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X