சினிமா பயணத்தில் தடை கற்களை தாண்டி வெற்றி படிக்கட்டுகளை எட்டிப்பிடித்து 'சேது' படத்தில் தன் நடிப்பு திறமையால் முத்திரை பதித்த விக்ரம் வீட்டில் இருந்து புயலாய் புறப்பட்டு 'ஆதித்யா வர்மா' படத்தில் ஹீரோவாக அறிமுகமான துருவ் விக்ரம் மனம் திறக்கிறார்...
* 'ஆதித்யா வர்மா' படம் பற்றி சொல்லுங்கள்?இந்த படத்தை இரண்டாவது முறையாக எங்க அப்பா, நான், படக்குழுவினர் இணைந்து கவனமாக எடுத்திருக்கோம். தெலுங்கு 'அர்ஜுன் ரெட்டி' யை அப்படியே எடுக்காமல் தமிழ் சினிமாவுக்காக மாற்றினோம். கண்டிப்பா ரசிகர்களுக்கு பிடிக்கும்.
* அறிமுக படமான 'அர்ஜுன் ரெட்டி'யை தேர்வு செய்தது ?அப்பா தான் இந்த படத்தை பார்த்துட்டு நான் நடிக்கணும்னு ஆசை பட்டார். தெலுங்கில்'அர்ஜுன் ரெட்டி'க்கு பின் விஜய் தேவரகொண்டாவுக்கு பெரிய பெயர் கிடைத்தது. அதானல் தான் அந்த படத்தின் தமிழ் ரீமேக்கான 'ஆதித்ய வர்மா'வை அப்பா தேர்வு செய்தார்.
*அப்பா விக்ரம் முன் 'லிப் லாக்' காட்சியில் நடித்தது ?படப்பிடிப்பை பொறுத்தவரை 'லிப் லாக்', சண்டை, பாடல் காட்சிகளை பொதுவாக தான் பார்க்கிறோம். அதனால் அப்பா முன் முத்தக்காட்சி எடுத்தது பற்றி எனக்கு எதுவும் யோசிக்க தோன்றவில்லை.
* பிரியா ஆனந்த், நடிப்பு பற்றி சொல்லுங்க?பிரியா ஆனந்த் 15 நிமிடம் மட்டும் தான் வருவாங்க. ஆனால் அவ்வளவு பவர்புல் ரோல் பனிதா லண்டனில் பிறந்து, வளர்ந்தவங்க தமிழ் தெரியாது. ஹிந்தி படத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்திருக்காங்க.
* துருவ் விக்ரமுக்கு ரசிகர்கள் தரும் பாராட்டுக்கள்?அப்பாவுடன் அவர் நடித்த படம் பார்க்க போகும் போதெல்லாம் நம்மளுக்கு இந்த மாதிரி ஒரு நாள் வரவேற்பு கிடைக்கும், விசில் அடிப்பாங்க, கை தட்டணும் நினைப்பேன். காலேஜ் நிகழ்ச்சிக்கு போகும் போது அப்பா பையனா பார்க்காமல் துருவுக்கு திறமை இருக்கு, நல்லா பேசறான்னு பாராட்டுறாங்க.
* அப்பா சினிமாவில் கஷ்டப்பட்டார் உங்களுக்கு ஈசியான அறிமுகம் ?36 வயசில் தான் அப்பா 'சேது' படத்தில் நடிக்க வந்தார். அப்பா அனுபவித்த கஷ்டங்கள், சம்பாதித்த பேரு வீணாக போக கூடாது. அப்பா சினிமாவுக்கு கொடுத்த எதையும் நான் மிஸ்யூஸ் பண்ண விரும்பல.எனக்கு கிடைத்த ஆதித்ய வர்மா வாய்ப்பை சரியாகப் பயன்படுத்த விரும்புறேன். அப்பா பேரை காப்பாற்றும் பொறுப்பு எனக்கு இருக்கு.
* நீங்களும் அப்பாவும் வெற்றிமாறன் படத்தில் ?ஒருமுறை எங்களிடம் வெற்றிமாறன் பேசினார் அப்பா தான் என்னை கூப்பிட்டு அவரோட நடிக்க வைக்கணும்னு நினைக்கிறேன்னு கூறினார்.
* அப்பாவிடம் கற்றுக்கொள்ள வேண்டியது?அப்பா கிட்ட இருக்கிற அர்ப்பணிப்பு, தன்னம்பிக்கையை மெதுவாக தான் கற்றுக் கொண்டேன். 'பீமா', 'கந்தசாமி', 'ஐ' படத்துக்காக உடலை வருத்தி அவர் உழைத்த உழைப்பை பார்த்து நிறைய கத்துகிட்டேன்.
* படத்தில் நிறைய தம், சரக்கு அடிச்சிருக்கிங்களே?உண்மையிலேயே எனக்கு அந்த பழக்கம் இல்லைங்க. சமீபத்தில் ஒரு கல்லுாரி விழாவில் கூட நான் இதை பத்தி பேசி இருக்கேன்.
* உங்க அம்மா பற்றி ஏதாவது சொல்லுங்களேன்?இப்பவும் அம்மா தான் எனக்கு சாப்பாடு ஊட்டுவாங்க. என்ன டிரஸ் போடனும், எப்படி ஸ்டேஜ்ல பேசணும்னு அம்மா கிட்ட தான் டிஸ்கஸ் பண்ணுவேன். நான் நல்லவனா இருக்கணும், சினிமாவில் நல்ல பெயர் எடுக்கணும்னு அடிக்கடி அம்மா சொல்வாங்க.
* நடிப்பு தாண்டி நீங்கள் கற்றுக் கொண்டது?கிட்டார், பியானோ வாசிப்பேன். பாட்டு கூட பாட பிடிக்கும். ரஹ்மான் இசைப் பள்ளியில் கீ போர்டு வாசிக்க கற்றுக் கொண்டேன். மியூசிக் இன்ஜினியரிங் படிக்கணும்ங்குறது என் லட்சியம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE