புதுடில்லி: மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து காங்., இடைக்கால தலைவர் சோனியாவிடம் பேசவில்லை என தேசியவாத காங்., தலைவர் சரத்பவார் தெரிவித்தார்.
மஹாராஷ்டிராவில் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் ஏற்பட்ட மோதலால் பா.ஜ., - சிவசேனா கூட்டணி முறிந்தது. இதனால் கவர்னர் அழைத்தும் பெரும்பான்மை இல்லாததால் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்-காங்., கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியவில்லை.
இதனால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதன் பிறகு காங்., - தேசியவாத காங்., கூட்டணியுடன் பேசி, ஆட்சி அமைக்க சிவசேனா தயாராகி வருகிறது. இதில், காங்.,-என்சிபி., சார்பில் கட்சிகள் சில நிபந்தனைகள் விதித்திருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், தேசியவாத காங்., தலைவர் சரத்பவார், காங்., இடைக்கால தலைவர் சோனியாவை டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பில் சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது மற்றும் அமைச்சரவையில் பங்கு தொடர்பாக விவாதிக்கப்படுகிறதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் சரத்பவார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, மஹாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூ்டடணி வைத்து ஆட்சி அமைப்பது குறித்து சோனியாவிடம் பேசவில்லை. மஹாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து மட்டுமே பேசினேன் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE