சென்னை: நடிகர் கமல் விழாவில் பேசிய நடிகர் ரஜினி அரசியலில் அதியம் நடக்கும், நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என பேசினார்.
ரஜினி பேச்சு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியது, அதிசயம், அற்புதம், அதிர்ஷ்டம் நிகழும் என ரஜினி சொன்னது, அ.தி.மு.க.வுக்கு தான். மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைப்போம். 2021ல் அ.தி.மு.க. ஆட்சி அமைப்பதையே அதிசயம் என்று ரஜினி கூறி இருக்கலாம். அதிசயம், அதிர்ஷ்டத்தை ரஜினி நம்பலாம், ஆனால் நாங்கள் மக்களை, வாக்காளர்களை மட்டுமே நம்புகிறோம். அதிமுகவை விமர்சித்து பெரிய ஆள் ஆகிவிடலாம் என நினைக்கிறார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக மறைந்து விடும் என்றார்கள். ஆனால் ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது. இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.

அஜித் அரசியலுக்கு வரணும்
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விருதுநகரில் கூறியது, ரஜினி பேசியதில் தவறில்லை.பாட்ஷா படத்தின் போதே ரஜினி அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். காலம் தாழ்த்திவிட்டார். ரஜினி, கமல், விஜய் தான் அரசியலுக்கு வரவேண்டுமா., எங்க 'தல' அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா ? அ.தி.மு.க.விற்கு விசுவாசமாக உள்ள சினிமா நட்சத்திரங்களையும் நாங்கள் அ.தி.மு.க.வில் களம் இறக்குவோம். அ.தி.மு.வை ஜெயிக்க வைக்க எந்தவித சித்துவிளையாட்டுகளை நாங்கள் செய்வோம் என பேசியது உண்மை தான். ரஜினி ஆன்மிக வாதி என்பதால் நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என ஆன்மிக கோணத்தில் கூறியுள்ளார். என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE