மத்திய அமைச்சரின் புதிய பார்முலா: ஏற்குமா சிவசேனா

Updated : நவ 18, 2019 | Added : நவ 18, 2019 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி: மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 3:2 என்ற பார்முலாவை சிவசேனாவிடம் கூறியதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிராவில் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் ஏற்பட்ட மோதலால் பா.ஜ., - சிவசேனா கூட்டணி முறிந்தது. இருகட்சிகளும் இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருக்கலாம் என சிவசேனாவின் கோரிக்கையை பாஜ., நிராகரித்ததால் கூட்டணி முறிந்தது. இதனால் கவர்னர்
Maharashtra, BJP, Shivsena, UnionMinister, RamdasAthawale, Formula, மஹாராஷ்டிரா, சிவசேனா, பாஜ, மத்திய அமைச்சர், ராம்தாஸ் அத்வாலே

புதுடில்லி: மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 3:2 என்ற பார்முலாவை சிவசேனாவிடம் கூறியதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் ஏற்பட்ட மோதலால் பா.ஜ., - சிவசேனா கூட்டணி முறிந்தது. இருகட்சிகளும் இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருக்கலாம் என சிவசேனாவின் கோரிக்கையை பாஜ., நிராகரித்ததால் கூட்டணி முறிந்தது. இதனால் கவர்னர் அழைத்தும் பெரும்பான்மை இல்லாததால் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்-காங்., கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதன் பிறகு காங்., - தேசியவாத காங்., கூட்டணியுடன் பேசி, ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சித்து வருகிறது.


latest tamil news


இந்நிலையில், டில்லியில் காங்., இடைக்கால தலைவர் சோனியாவுடன், தேசியவாத காங்., தலைவர் சரத்பவார் சந்தித்து பேசினார். அதில், கூட்டணி வைத்து ஆட்சி அமைப்பது குறித்து பேசவில்லை, மஹாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து மட்டுமே பேசினோம் என சரத்பவார் கூறினார். அதேபோல், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், சரத்பவாரை திடீரென சந்தித்தார். இதனால், மஹா.,வில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.


latest tamil news


இதற்கிடையே மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே புதிய யோசனையை கூறியுள்ளார். அவர் கூறியதாவது: மஹா.,வில் அரசியல் நிச்சயமற்ற தன்மையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சஞ்சய் ராவத்துடன் பேசினேன். ஆட்சி அதிகாரத்தில் பாஜ., 3 ஆண்டுகளும், சிவசேனா 2 ஆண்டுகளும் என்னும் பார்முலாவை பரிந்துரைத்தேன். இதனை பாஜ., ஏற்றுக்கொண்டால் இது குறித்து சிந்திக்கிறோம் என சஞ்சய் கூறினார். எனவே, பாஜ.,விடம் இது பற்றி விவாதிப்பேன். இவ்வாறு ராம்தாஸ் கூறினார். இவரின் 3:2 பார்முலாவை சிவசேனா ஏற்குமா அல்லது காங்., - தேசியவாத காங்., உடன் கூட்டணி சேருமா என்பது இன்னும் சில நாட்களில் முடிவாகிவிடும்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
19-நவ-201914:58:34 IST Report Abuse
narayanan iyer மீண்டும் தேர்தலை ஒரு வருடம் கழித்து கொண்டுவாருங்கள் . அவனவன் தனித்து நிற்கட்டும் . வெற்றி பெறுபவன் ஆட்சி அமைக்கட்டுமே எந்த கூட்டணி கட்சி ஆட்சி அமைத்தாலும் ஒருவருக்கு ஒருவர் நம்பகத்தன்மை இருக்காது .
Rate this:
Cancel
Citizen_India - Woodlands,இந்தியா
19-நவ-201907:16:17 IST Report Abuse
Citizen_India பாஜக திரும்ப சிவசேனாவுடன் சேர்ந்தா, பஜாக்கு தான் இழிவு
Rate this:
MANI DELHI - Delhi,இந்தியா
19-நவ-201913:06:40 IST Report Abuse
MANI DELHIஅரசியல் சாக்கடையில் இழிவு என்பதை விட இப்போது தேவை நிலையான மற்றும் தத்துவார்த்ததில் ஒன்றுபட்ட கூட்டணி அரசு தான். வெக்கம் மானம் பார்க்க யாருக்கும் தேவையில்லை.. ஏன் பிஜேபி ஒரு முறை அமித்ஷா போன் பண்ணி பேசினாலே நாளைக்கு அரசு அமைந்துவிடும். வெளிப்படையாக ஈகோ இப்போது யாருக்கும் தேவையில்லை........
Rate this:
Cancel
வல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா
19-நவ-201905:32:43 IST Report Abuse
வல்வில் ஓரி செத்த நாளு முன்னாடி சிவசேனா காங்கிரசை ரெண்டையும் மிக்ஸ் பண்ணி அடிச்சானேய்யா? அதுக்குள்ளே மூஞ்சை கழுவிட்டு வந்து திரும்பவும் சிவசேனாவை பார்த்து சிரிக்குதா கான்கிராஸ்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X