இந்த செய்தியை கேட்க
சென்னை: தமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கவர்னரின் செயலராக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய தலைமை தகவல் ஆணையரை நியமிப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, தகவல் ஆணையர் சம்பந்தமான பரிந்துரை கடிதத்தை அளித்தாக ஜெயக்குமார் கூறினார்.

இந்நிலையில், தமிழக அரசு சார்பில் வெளியான செய்தி குறிப்பில், தமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் ஐஏஎஸ் மற்றும் கவர்னரின் செயலராக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ராஜகோபால், 1984ல் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்து, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் கலெக்டராக இருந்துள்ளார். மேலும், தற்போது கவர்னரின் செயலராக இருந்த இவர், தலைமை தகவல் ஆணையராக 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதில், கவர்னரின் செயலராக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் ஐஏஎஸ்., நியமிக்கப்பட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE