கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் அரசாணை ரத்தாகுமா ?

Updated : நவ 18, 2019 | Added : நவ 18, 2019 | கருத்துகள் (30)
Share
Advertisement
பட்டா வழங்க, அரசாணை,  ரத்தாகுமா ?, கோவில் நிலங்கள்

சென்னை: கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை கோரிய வழக்கில், 'அறநிலையத்துறை அதிகாரிகள், அரசின், 'ரிமோட் கன்ட்ரோல்' பொம்மைகளாக செயல்படுகின்றனரா? கோவில் நிலங்கள் எவ்வளவு ஆக்கிரமிப்பில் உள்ளன என்ற விபரங்கள் இல்லாமல், அரசாணையை எப்படி அமல்படுத்த முடியும்?' எனக் கேட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள், விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

சேலம், கன்னன்குறிச்சியைச் சேர்ந்த, ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு:தமிழக வருவாய் துறை, 2019 ஆக., 30ல், அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையில், ஆட்சேபனை இல்லாத, அரசு புறம்போக்கு நிலத்தில், நீண்ட காலமாக குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கவும், ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நிலத்தில் இருப்பவர்களை அகற்றி, அவர்களுக்கு தகுந்த இடத்தை கண்டறிந்து, பட்டா வழங்குவது குறித்தும், தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த அரசாணை, கோவில் நிலத்தை ஆக்கிரமித்து இருப்பவர்களுக்கும், பச்சை கொடி காட்டுகிறது. அரசு புறம்போக்கு நிலத்தில் இருப்பவர்களையும், கோவில் நிலத்தை ஆக்கிரமித்து இருப்பவர்களையும், சமமாக பார்க்க முடியாது. கோவில் நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கு, பட்டா வழங்குவது, அறநிலையத்துறை சட்டத்துக்கு எதிரானது; அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவுக்கு அரசு பதில் அளிக்க, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து, வருவாய் துறை தாக்கல் செய்த பதில் மனு:கோவில் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருந்தால், அந்த ஏழை குடும்பங்களின் நலனை பரிசீலித்து, தகுதியானவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக, கோவில் நிலத்தை வாங்குவதற்கு, நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து, மாவட்ட வாரியாக, கோவில் வாரியாக திட்டம் வகுத்து, அரசுக்கு அனுப்பப்படும்.அரசிடம் உத்தரவு பெற்ற பின், வரன்முறை செய்யப்படும். வீடு இல்லாத ஏழை எளியவர்களுக்கு, வீட்டு வசதி அளிக்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். அதனால், கோவில் அதிகாரிகளின் கருத்துக்களும் பரிசீலிக்கப்படும்.

குறிப்பிட்ட நிலம் கோவிலுக்கு தேவைப்படவில்லை என்றால், தகுதியான ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க பரிசீலிக்கலாம். அதற்கான இழப்பீட்டு தொகை, சம்பந்தப்பட்ட கோவிலுக்கு வழங்கப்படும்.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், அறநிலையத்துறை சார்பில், சிறப்பு பிளீடர் மகாராஜாவும் ஆஜராகினர். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆஜராக உள்ளதால், விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றனர்.அதற்கு, நீதிபதிகள், 'பிரதான மனுவை நிலுவையில் வைக்கிறோம். இடைக்கால மனு மீது உத்தரவு பிறப்பிக்கிறோம். ஏற்கனவே, அரசின் நிலையை, பதில் மனுவில் தெரிவித்து விட்டீர்கள்' என்றனர். மேலும், நீதிபதிகள் கூறியதாவது:

அரசு, தான் பிறப்பித்த உத்தரவு வழியாக, கோவில் நிலங்களை விற்க, அறநிலையத்துறையை வற்புறுத்துகிறதா? அரசு பிறப்பித்த உத்தரவு, கோவில்களுக்கு எப்படி பலன் அளிக்கும்? அரசின் ஊதுகுழலாகவும், 'ரிமோட் கன்ட்ரோல்' வழியாக இயக்கப்படும் பொம்மைகளாகவும், அறநிலையத்துறை அதிகாரிகள் இருக்கின்றனர்.

தமிழகத்தில், அறநிலையத்துறையின் கீழ், 38 ஆயிரம் கோவில்கள் உள்ளன; அவற்றுக்கு சொந்தமாக எவ்வளவு நிலங்கள் உள்ளன? அவற்றில் எவ்வளவு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன; குத்தகை நிலங்கள் எவ்வளவு உள்ளன என்கிற விபரங்கள் முதலில் தேவை.இந்த விபரங்கள் இல்லாமல், எப்படி அரசாணையை அமல்படுத்த முடியும்? குறிப்பிட்ட கோவில்களை தேர்ந்தெடுத்து, அரசாணையை எப்படி அமல்படுத்த முடியும்?இவ்வாறு, நீதிபதிகள் கூறினர். பின், அரசாணைக்கு தடை கோரிய இடைக்கால மனு மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivas - Chennai,இந்தியா
19-நவ-201915:07:48 IST Report Abuse
Srinivas கோயில் சிலை திருட்டு வழக்கை பொன் மாணிக்கவேல் விசாரணை செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்து தோற்றுப்போன இந்த அடிமை ஆட்சியாளர்கள் இப்போது கோயில் நிலத்தில் கைவைக்க துணிந்துள்ளனர். இவர்கள் அப்பன்வீட்டு சொத்தா கோயில் நிலங்கள்? ஏன் மதரஸா, சர்ச் நிலங்களை பட்டா போட அரசாணை பிறப்பிக்கவில்லை? இந்துக்கள் என்ன இளிச்சவாயர்களா? கேட்பதற்கு யாரும் வரமாட்டார்கள் என்ற நினைப்பா இந்த அடிமைகளுக்கு? குத்தகைக்கு விடப்பட்டுள்ள நிலத்தில் வரும் வருமானம் கணக்கில் காட்டப்படாமல் பல ஆயிரம் கோடிகள் இந்த அடிமைகளால் கொள்ளையடிக்கப்படுகிறது. அறநிலையத்துறையை கையில் வைத்துக்கொண்டு அடிமைகள் செய்யும் கொள்ளை அராஜகம் மிக மோசம். நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தால் அது கொஞ்சம்கூட அடிமைகளுக்கு உரைப்பதில்லை. வெட்கம்,மானத்தை விட்டு கொள்ளையடிப்பதிலேயே நோக்கமாக இருக்கும் இந்த அடிமைகளை இறைவன் தான் தண்டிக்கவேண்டும். இந்துக்களுக்கு நல்லது செய்வோம் என்று பிதற்றும் பிஜேபி, அடிமைகள் கொடுக்கும் கொள்ளைப்பண பங்கை பெற்றுக்கொண்டு மெளனமாக இருக்கிறது. இவர்களின் வெளிவேஷத்தை மக்கள் நன்றாக பார்த்துக்கொண்டுள்ளனர்.
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
19-நவ-201914:30:59 IST Report Abuse
Nagarajan D யார் இடத்தை யாருக்கு யார் தருவது? அந்த நிலமெல்லாம் கருணாநிதியோ இல்லை அவன் தலைவன் கிழட்டு ராமசாமியோ இல்லை சினிமா காரர்கள் சொத்தோ அல்ல. அப்படி பட்டா போட்டு தர விரும்பினால் அவ்வை ஷண்முகம் சாலையில் உள்ள ADMK தலைமை அலுவலக இடத்தையோ இல்லை தேனாம்பேட்டில் உள்ள அண்ணா அறிவாலயத்தையோ கொடுக்கட்டும். அப்படியும் பத்தவில்லை என்றால் கிழட்டு ராமசாமியின் சொத்துகளை பகிர்ந்து கொடுக்கட்டும் யார் கேட்க முடியும்
Rate this:
Srinivas - Chennai,இந்தியா
19-நவ-201920:15:42 IST Report Abuse
Srinivasஇப்போது இருப்பது அடிமை அரசு. அதை ஆதரிப்பது பிஜேபி அரசும்,கட்சியும். நேரடியாக விஷயத்திற்கு வந்து கருத்து எழுதவும். கோயில் நிலத்தை பட்டா போட அரசாணை பிறப்பித்தது கருணாநிதியோ, ராமசாமியோ அல்ல என்பதை புரிந்துகொள்ளவும்....
Rate this:
Cancel
ஹரிஷ் - விழுப்புரம்,இந்தியா
19-நவ-201912:37:29 IST Report Abuse
ஹரிஷ் கோவில் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் என்பது எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கும் மற்றும் அரசுக்குமே சொந்தமானது அல்ல.பிற்காலத்தில் இப்படிப்பட்ட அயோக்கியர்கள்தான் அரசாளுவார்கள் என்று முன்னரே தெரிந்துதான் அன்றைய மன்னர்களும்,மக்களும் கோவில்களை உருவாக்கியதோடு அல்லாமல் அதன் பராமரிப்பிற்கென்று நிலங்களையும் மற்றைய சொத்துக்களையும் தானமாக வழங்கினார்.அப்படி வழங்கப்பட்ட சொத்துக்கள் ஏராளம். இது போக அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அத்தனை கோவில்களின் உண்டியல் வருமானமாக ஒவ்வொரு மாதமும் பல கோடிகள் அரசு கஜானாவிற்கு சென்று சேர்கிறது. ஆனாலும், அதனை பயன்படுத்தி கோவில்கள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை. பக்தர்கள் கோவிலுக்கென கொடுக்கும் அந்த பணத்தையும் சேர்ந்துதான் அரசின் செலவினங்கள்.ஆக இன்றைக்கும் கோவில்கள்தான் அரசுக்கு பிச்சை போடுகிறதே தவிர அரசால் கோவிலுக்கு எந்த பலனும் இல்லை. இதுபோக கோவில் நிலங்களையும், மற்றைய சொத்துக்களையும் அந்த பகுதிகளை சேர்ந்த அரசியல் வியாதிகளும், சில அயோக்கியர்களும் ஆக்கிரமித்து, சிலவற்றை விற்றும் தீர்த்துவிட்டனர். இனியாவது இந்த இந்திய போலி அரசியல்வாதிகளையும், இவர்களின் போலி மதச்சார்பின்மையும் நம்பாமல் இந்துக்கள் விழித்து கொள்ள வேண்டும். அப்போதுதான் இருக்கும் கோவில்களையும், அதன் சொத்துக்களையுமாவது காப்பாற்றி கொள்ள முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X