அரசியல் செய்தி

தமிழ்நாடு

இ.பி.எஸ்.,முதல்வரானது போல அரசியலில் அதிசயம் நடக்கும்: ரஜினி

Updated : நவ 20, 2019 | Added : நவ 18, 2019 | கருத்துகள் (12)
Advertisement
இ.பி.எஸ்.,முதல்வர்,அரசியலில் அதிசயம் நடக்கும்: ரஜினி

சென்னை: ''இரண்டு ஆண்டுகளுக்கு முன், முதல்வர் ஆவோம் என, இ.பி.எஸ்., கனவிலும் நினைத்திருக்க மாட்டார். தமிழக அரசியலில் நேற்று நடந்த அதிசயம், இன்றும் நடக்கிறது; நாளையும் நடக்கும்,'' என, நடிகர் ரஜினி பேசினார்.

நடிகரும், மக்கள் நீதி மைய தலைவருமான கமலின், 60 ஆண்டு கலையுலக பயணத்தை கொண்டாடும் வகையில், நேற்று முன்தினம், நேரு உள் விளையாட்டரங்கில், இளையராஜாவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ரஜினி, கமல், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், தமிழகம் முழுதும் நடத்தப்பட்டு வரும், திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக, 1 கோடி ரூபாய் காசோலையை கமலும், ரஜினியும் இணைந்து வழங்கினர்.

நிகழ்ச்சியில், ரஜினி பேசியதாவது: களத்துார் கண்ணம்மாவில் கமலிடம் பார்த்த பிரமிப்பு, இன்றும் மாறவில்லை. நடிகர், இயக்குனர், பாடகர் என, பல பரிமாணம் எடுத்தவர். 10 வேடத்தில் நடித்ததால், அவர் உலகநாயகன் ஆனார்.

எங்களின் கொள்கைகள் மாறலாம்; எங்கள் இருவரின், 43 ஆண்டுகால நட்பு மாறாது; எஞ்சிய நாட்களிலும் தொடரும். இரண்டு ஆண்டுகளுக்கு முன், இ.பி.எஸ்., முதல்வர் ஆவார் என, அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். அவரது ஆட்சி சில மாதங்கள் கூட தாக்குபிடிக்காது என்றனர். ஆனால், இப்போது என்ன நடக்கிறது. தமிழக அரசியலில் நேற்று நடந்த அதிசயம், இன்றும் நடக்கிறது; நாளையும் நடக்கும்.இவ்வாறு, ரஜினி பேசினார்.

நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், ''ரஜினி, கமல் இருவரும் சேர்ந்து, அரசியலில் ஈடுபட வேண்டும். அவர்கள் விரும்பும் அளவுக்கு ஆட்சியை கொடுத்து விட்டு, பின் அவர்களின் தம்பிகளுக்கு வழி விட வேண்டும்,'' என்றார். இவரது பேச்சு, ரஜினி, கமலுக்கு பின், விஜயை தமிழக அரசியலில் ஈடுபடுத்துவதை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
19-நவ-201919:09:25 IST Report Abuse
தமிழ் மைந்தன் அப்போ அடுத்தமுறை ....ஊழல் திமுக மீண்டும் மூன்றாவது இடமா
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
19-நவ-201918:54:03 IST Report Abuse
தமிழ் மைந்தன் அதிர்ஷ்டம் என்றால் அதிசயம் என்றால் அது ஸ்டாலின் தான்......தனக்கு முன் இரண்டு ஆண் வாரிசு களும் ஒரு பெண் வாரிசும் இருந்தும் கட்சியில் பல அறிவாளிகள் இருந்தும் மூத்த தலைவர்கள் இருந்தும் கருணை அடிப்படையில் பதவி கிடைத்ததே.......இதுவே அதிசயம், ஆச்சார்யம், உலக சாதனை எனப்படும்.....
Rate this:
Share this comment
Cancel
swega - Dindigul,இந்தியா
19-நவ-201918:11:47 IST Report Abuse
swega நீ பேசுறதெல்லாம் சரிதான். ஆனா (கமல் கூட) உன் சேர்க்கை சரியில்லையே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X