அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினி, கமல் இணைந்தாலும் அசைக்க முடியாது : அமைச்சர் ஜெயகுமார் சவால்

Updated : நவ 18, 2019 | Added : நவ 18, 2019 | கருத்துகள் (15)
Advertisement
ரஜினி, கமல் இணைந்து, அசைக்க முடியாது :ஜெயகுமார் சவால்

சென்னை: ''நடிகர்கள் ரஜினி, கமல் இணைந்தாலும், அ.தி.மு.க.,வை அசைக்க முடியாது,'' என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை, அமைச்சர் ஜெயகுமார், நேற்று மாலை சந்தித்து பேசினார். அப்போது, முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில், மாநில தலைமை தகவல் ஆணையர் நியமனத்திற்கான பரிந்துரை குறித்த தகவல்களை, கவர்னரிடம் தெரிவித்தார்.

பின், ஜெயகுமார் கூறியதாவது:தலைமை தகவல் ஆணையர் தேர்வில், வெளிப்படைத்தன்மை அதிகம். எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பது, சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. உள்நோக்கத்தோடு எதுவும் செய்யவில்லை. கூட்டத்தில் பங்கேற்பது ஆரோக்கியமான விஷயம். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஏன் பங்கேற்கவில்லை என, தெரியவில்லை.'அதிர்ஷ்டம் ஏற்படலாம்; அதிசயம் ஏற்படலாம்' என்று, ரஜினி நம்பலாம். நாங்கள் அதிர்ஷ்டத்தை நம்புவதில்லை. 2021ல் மீண்டும், அ.தி.மு.க.,வை, மக்கள் ஆட்சியில் அமர்த்துவர். இதைத் தான் அதிசயம் என்று ரஜினி கூறியிருக்கலாம்.

சகாப்தம் என்பது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவோடு முடிந்து விட்டது. எங்களை தொட்டால், அவர்கள் தான் துார செல்வர். நடிகர் ரஜினியும், கமலும் ஒன்றாக இணைந்தால், அது ரஜினிக்கு பலவீனம். ரஜினியும், கமலும் சேர்ந்தாலும், எங்களை அசைக்க முடியாது. எம்.ஜி.ஆர்., காலத்திலிருந்து, நாங்கள் மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்; எங்கள் பயணம் தொடரும்; என்றைக்கும், ஜெ., ஆட்சி தொடரும். மக்களிடம் இருந்து பிரிக்க முடியாத இயக்கமாக, அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகிற கட்சியாக, ஆட்சியாக, அ.தி.மு.க., உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
19-நவ-201916:46:16 IST Report Abuse
Anantharaman Srinivasan Winning in 2021 election is not so easy for AIADMK. ரஜினி கமல் இணைந்தால் நிச்சயம் 35 % ஓட்டுகள் தடம் மாறும்...
Rate this:
Share this comment
Cancel
Suri - Chennai,இந்தியா
19-நவ-201916:23:08 IST Report Abuse
Suri இவருடைய பேச்சு மல்லாக்க படுத்துக்கொண்டு எச்சில் உமிழ்வதற்கு சமம்.
Rate this:
Share this comment
Cancel
Suri - Chennai,இந்தியா
19-நவ-201916:22:12 IST Report Abuse
Suri ஜெயக்குமார் அவர்களே வெற்றிவேல் வெளியிட்ட ஆடியோ tape சவாலில் நீங்கள் ஜெயித்து விடீர்களா?? நீங்கள் நல்ல வேலையாள். செல்லும் இடம் எல்லாம் தடம் பதித்து வருகிறீர்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X