காற்று மாசை குறைக்க எம்.பி.,க்கள் பிரசாரம்

Updated : நவ 18, 2019 | Added : நவ 18, 2019 | கருத்துகள் (3)
Advertisement
காற்று மாசு, குறைதல், எம்.பி.,க்கள், பிரசாரம்

புதுடில்லி:காற்று மாசு பிரச்னை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல எம்.பி.,க்கள் நேற்று பார்லி.,க்கு சைக்கிள் மற்றும் மின்சார கார்களில் வந்தனர்.

டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி அரசு அமைந்துள்ளது. இங்கு காற்று மாசு பிரச்னை மிகவும் தீவிரமடைந்துள்ளது. இங்கு, காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், பார்லி.,யின் குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. பல்வேறு கட்சி எம்.பி.,க்கள், சுற்றுச்சூழல் பிரச்னை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வந்தனர்.காங்.,கைச் சேர்ந்த கவுரவ் கோகோய், முகமூடி அணிந்து வந்தார். பார்லி., வளாகத்தில் உள்ள மஹாத்மா காந்தி சிலை எதிரே, எதிர்ப்பு தெரிவித்து, முகமூடியுடன் நின்றிருந்தார்.

பா.ஜ.,வைச் சேர்ந்த மன்சுக் மாண்டவியா மற்றும் மனோஜ் திவாரி ஆகியோர் சைக்கிளில் வந்தனர். பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான, பிரகாஷ் ஜாவடேகர், மின்சார காரில் வந்தார். அவர் கூறியதாவது:காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு பயன்படுத்தும் பழைய வாகனங்கள் படிப்படியாக, மின்சார கார்களாக மாற்றப்படுகின்றன.

சுற்றுச்சூழல் பிரச்னைக்கு தீர்வு காண, அனைத்து மக்களும் ஒத்துழைக்க வேண்டும். டில்லியில் ஒவ்வொரு நாளும் காற்று மாசிற்க்கு எதிராக போராடி வருகிறோம். இந்த நிலையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத, மின்சார வாகனம், சைக்கிள் அல்லது பொது போக்குவரத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்னால் முடிந்த வரையில், மின்சார காரைப் பயன்படுத்த துவங்கியுள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
19-நவ-201914:15:51 IST Report Abuse
Sampath Kumar சுற்று சூழ் இயல் பற்றி அணைத்து பள்ளி கல்லுரி மாணவர்கள் படிக்க அரசு வலி வகை செய்ய வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
19-நவ-201904:15:52 IST Report Abuse
blocked user மின்சார கார்கள் மட்டும் CO2 வெளியிடாமல் தயாரிக்கப்படும் மின்சாரத்தில் ஓடுபவையா? முழுவதும் சோலார் அல்லது அணுசக்தியை உபயோகித்து பெறப்படும் மின்சாரமே 100% CO2 வெளியீட்டை தடுக்கும். நிலக்கரியை இயங்கும் மின் உற்பத்தி அதிக மாசை வளிமண்டலத்துக்கு கொண்டு செல்கிறது.
Rate this:
Share this comment
Cancel
shoba -  ( Posted via: Dinamalar Android App )
19-நவ-201901:41:05 IST Report Abuse
shoba hahahaha
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X