சிதம்பரம், 'ஜாமின்' மனு இன்று விசாரணை?

Updated : நவ 19, 2019 | Added : நவ 19, 2019 | கருத்துகள் (25)
Share
Advertisement
புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், 'ஜாமின்' கோரி, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, இன்று அல்லது நாளை விசாரணைக்கு வரவுள்ளது. ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான சிதம்பரம், ஆகஸ்டில், சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர்,
 சிதம்பரம், மனு இன்று விசாரணை?


புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், 'ஜாமின்' கோரி, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில்
மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, இன்று அல்லது நாளை விசாரணைக்கு வரவுள்ளது. ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான சிதம்பரம், ஆகஸ்டில், சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர், டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


latest tamil news
சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில், சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைத்தாலும், அமலாக்க துறை தொடர்ந்த வழக்கில், டில்லி உயர் நீதிமன்றம், ஜாமின் அளிக்க மறுத்து விட்டது. இதை எதிர்த்து, சிதம்பரம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல் முறையீடு செய்யப்பட்டது.அப்போது, சிதம்பரம் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ''இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும்,'' என, வலியுறுத்தினார். ஆனால், தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, இந்த மனுவை, இன்று அல்லது நாளை விசாரிப்பதாக உத்தரவிட்டார். இதற்கிடையே, சிதம்பரத்துக்கு ஜாமின் மறுத்து, டில்லி உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவில், சில பிழைகள் உள்ளதாகவும், அதை சரி செய்யும்படியும், அமலாக்க துறை சார்பில், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா
20-நவ-201903:54:06 IST Report Abuse
Sukumaran Sankaran Nair பஜக என்ற தேசவிரோத கட்சியிடம் அதிகாரம் தந்துவிட்டு ஏமாந்து விட்டோம். ஒரு கண்ணியமிக்க ஆளுமையை தரக்குறைவாக திட்டுபவர்கள் பொறுப்பின்றி கூறும் கருத்துக்களும் அவரவர்கள் சந்திக்க வேண்டிய தீர்ப்பு நாள் வரலாம். "முன்னறிவிப்பின்றி மொத்த கணக்கை சரிசெய்ய நீ அழைக்கப்படுவதற்கு முன் உனது அன்றாடைய கணக்கை சரிபார்த்துக் கொள்வாயாக......." O Son of Spirit Bring Thy self to account each day ere thou art Summoned to submit for your deed ......"
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
19-நவ-201916:39:13 IST Report Abuse
Natarajan Ramanathan krish - chennai........அரசு வங்கியை பலர் ஏமாற்றி அயல்நாடுகளுக்கு ஓடுவதற்கு காரணமே இந்த ஊழல் சனியன்தான்.
Rate this:
Cancel
Mani -  ( Posted via: Dinamalar Android App )
19-நவ-201915:46:03 IST Report Abuse
Mani What is the process to get hearing of a case weekly? Is there any additional I have to pay?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X