சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோடிக்கு வரி ஏய்ப்பு? கரூர் கொசுவலை நிறுவனத்தில், 'ரெய்டு' நிறைவு

Updated : நவ 19, 2019 | Added : நவ 19, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
 கோடிக்கு வரி ஏய்ப்பு? கரூர் கொசுவலை நிறுவனத்தில், 'ரெய்டு' நிறைவு

கரூர்:கரூரில், கொசுவலை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், 435 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக, தெரிய வந்துள்ளது.

கரூர், ராம் நகரைச் சேர்ந்தவர், சிவசாமி, 50. இவர், 15 ஆண்டுகளுக்கு மேலாக, 'ஷோபிகா இம்பக்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற, கொசுவலை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.இங்கு தயாரிக்கப்படும், கொசுவலைகள் ரசாயனம் கலந்தவை; அதனால் அவை, வெளிநாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.கரூர் - சேலம் பழைய சாலை, வெண்ணைமலையில், இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது.திருச்சி, மதுரை, கோவை மாவட்டங்களை சேர்ந்த, 35க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள், 15ம் தேதி முதல், தலைமை அலுவலகம், சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் கொசுவலை தயாரிக்கும் நிறுவனம், சிவசாமியின் வீடு உள்ளிட்ட, ஐந்து இடங்களில் சோதனை நடத்தினர்.நேற்று மதியம், 3:30 மணிக்கு, வருமான வரித்துறையினர், சோதனையை நிறைவு செய்தனர்.

இதில், வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து, கணக்கில் காட்டப்படாத, 36 கோடி ரூபாய், 10 கிலோ தங்க நகைகளை, வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.மேலும், 435 கோடி ரூபாய் மதிப்பில், வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக தெரிகிறது.இதற்கான ஆவணங்களை, வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.இந்த வார இறுதிக்குள், திருச்சி மத்திய மண்டல வருமான வரித்துறை அலுவலகத்தில், சிவசாமி ஆஜராகி, விளக்கம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shake-sphere - India,இந்தியா
19-நவ-201908:27:02 IST Report Abuse
 Shake-sphere கண்டுபிடித்தது ஒரு கொசு அளவு தான்
Rate this:
Berlioz - paris,பிரான்ஸ்
20-நவ-201915:14:02 IST Report Abuse
Berlioz பாதிக்கப்பட்ட கொசுவாக இருக்குமோ கடிக்க விடாததால் போட்டுக்கொடுத்து இருக்கும்...
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
19-நவ-201908:01:25 IST Report Abuse
Bhaskaran சம்பாதித்தை முழுவதும் வரித்துறைக்கு கொடுத்துடனும் அவிங்களாபார்த்து ஏதேனும் பிச்சை போடுவாங்க
Rate this:
Cancel
Krish - Chennai ,இந்தியா
19-நவ-201905:48:00 IST Report Abuse
Krish கொசு வலையில் இவ்வளவா ? நல்ல வியாபாரம்தான்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X