சம்பவம் செய்தி

தமிழ்நாடு

150 கார்களை திருடியவர் கைது

Added : நவ 19, 2019
Share
Advertisement
சூலுார்:பல்வேறு மாநிலங்களில், 150க்கும் மேற்பட்ட கார்களை திருடிய நபரை, போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம், காங்கயம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில், நேற்று, சூலுார் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, காரில் வந்த நபரிடம் விசாரித்ததில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததார். சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் தீவிரமாக விசாரித்தனர்.அதில், சென்னை, வியாசர்பாடி,

சூலுார்:பல்வேறு மாநிலங்களில், 150க்கும் மேற்பட்ட கார்களை திருடிய நபரை, போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், காங்கயம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில், நேற்று, சூலுார் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, காரில் வந்த நபரிடம் விசாரித்ததில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததார். சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் தீவிரமாக விசாரித்தனர்.அதில், சென்னை, வியாசர்பாடி, முல்லை அவென்யூவைச் சேர்ந்த பரமேஸ்வரன், 39, என்பதும், தற்போது மதுரையில் வசித்து வருவதும் தெரிய வந்தது. மேலும், கார் திருடி விற்பதை, தொழிலாக செய்து வந்துள்ளார். போலீசார், அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.போலீசார் கூறுகையில், 'தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களிலும், 150க்கும் மேற்பட்ட கார்களை திருடிய வழக்குகள், பரமேஸ்வரன் மீது உள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X