சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மறியலில் ஈடுபட்ட 103 விவசாயிகள் கைது

Added : நவ 19, 2019
Share
Advertisement
பல்லடம்:உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிராக, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், 103 பேர், பல்லடத்தில் கைது செய்யப்பட்டனர்.விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று, 13 மாவட்ட விவசாயிகள், மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, பல்லடத்தில்

பல்லடம்:உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிராக, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், 103 பேர், பல்லடத்தில் கைது செய்யப்பட்டனர்.விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று, 13 மாவட்ட விவசாயிகள், மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, பல்லடத்தில் நேற்று விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.முன்னதாக, உயர்மின் கோபுரங்களை விளை நிலங்களில் அமைத்து, விவசாயிகளை பாதிப்புக்குள்ளாக்க வேண்டாம். கேபிள் பதிப்பு பணி மூலம் திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, என்.எச்.,ரோட்டில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், 8 பெண்கள் உட்பட, 103 பேர் கைது செய்யப்பட்டு, தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X