பொது செய்தி

இந்தியா

சபரிமலை முதல்நாள் வருமானம் ரூ 3.32 கோடி: தேவசம்போர்டு தலைவர் தகவல்

Updated : நவ 19, 2019 | Added : நவ 19, 2019 | கருத்துகள் (4)
Advertisement

நாகர்கோவில்: ''சபரிமலையில் முதல் நாள் வருமானம் 3.32 கோடி ரூபாய். இது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 50 சதவீதம் அதிகம்,'' என்று தேவசம்போர்டு தலைவர் வாசு கூறினார்.






அவர் கூறியதாவது:சபரிமலையில் நடப்பு மண்டல காலம் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது. தரிசனம் முடிந்து பக்தர்கள் மகிழ்ச்சியாக திரும்புகின்றனர். தினமும் 40 ஆயிரம் பேருக்கு அன்னதானம் கொடுக்க தேவசம்போர்டு தயாராக உள்ளது. தேவையான அளவு அப்பம், அரவணை இருப்பு உள்ளது. மகாராஷ்டிராவில் தொடர்ந்து பெய்த மழையால், அங்கு ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தால் சர்க்கரை அனுப்ப இயலவில்லை. இதனால் உள்ளூரிலேயே சர்க்கரை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் இல்லாத சபரிமலை சீசன் என்பதுதான் தேவசம்போர்டின் திட்டம். எவ்வளவோ முயற்சி எடுத்தும் பிளாஸ்டிக் இப்போதும் பீதியைதான் ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. இருமுடி கட்டில் பிளாஸ்டிக் கவர்களில் பொருட்கள் கொண்டு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். இதற்காக அண்டை மாநிலங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.





நடை திறந்த முதல் நாள் வருமானம் 3.32 கோடி ரூபாய். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இது 50 சதவீதம் அதிகம். காணிக்கை, அப்பம், அரவணை என எல்லா வகையிலும் வருமானம் அதிகரித்துள்ளது. காணிக்கையாக மட்டும் ஒரு கோடியே 10 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது. அரவணை விற்பனையில் ஒரு கோடியே 19 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது.இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prakashc - chennai,இந்தியா
19-நவ-201914:46:03 IST Report Abuse
prakashc சபரிமலை சாமியை தவறாக சொன்ன திருமாவளவன் தண்டிக்கப்படவேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
shoba -  ( Posted via: Dinamalar Android App )
19-நவ-201914:24:06 IST Report Abuse
shoba romba kamiya iruke!
Rate this:
Share this comment
Cancel
krishna - chennai,இந்தியா
19-நவ-201912:40:18 IST Report Abuse
krishna உண்டி குலுக்கி கம்யூனிஸ்ட் எல்லாத்தையும் சுருட்டிடும்.நல்ல வேலை சபரிமலை தமிழ் நாட்டில் இல்லை.இருந்திருந்தால் நம்ம கட்டுமரம் பேமிலி சபரிமலை வைத்து உறிஞ்சி எடுத்து உலக மகா பணக்காரர்கள் ஆகி இருப்பார்கள்.இப்போ மட்டும் என்ன உலக மகா பணக்காரர்கள்தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X