அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள்: இந்தியாவுக்கு இரண்டாம் இடம்

Updated : நவ 19, 2019 | Added : நவ 19, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவில் கல்வி பயிலும், சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கையில், சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்தாண்டு, 2 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள், அமெரிக்காவில் கல்வி பயில்வதாக, ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.அமெரிக்காவில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை குறித்து, அந்நாட்டை சேர்ந்த, 'சர்வதேச கல்வி பரிமாற்றம்'

வாஷிங்டன்: அமெரிக்காவில் கல்வி பயிலும், சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கையில், சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்தாண்டு, 2 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள், அமெரிக்காவில் கல்வி பயில்வதாக, ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.



latest tamil news



அமெரிக்காவில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை குறித்து, அந்நாட்டை சேர்ந்த, 'சர்வதேச கல்வி பரிமாற்றம்' என்ற அமைப்பு, ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது.

அதன் விபரம்: அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தொடர்ந்து நான்காவது ஆண்டாக, 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள், இங்கு கல்வி கற்க தொடங்கி உள்ளனர். இந்த மாணவர்கள் மூலம், அமெரிக்க பொருளாதாரத்திற்கு, 3.2 லட்சம் கோடி நிதி கிடைத்துள்ளது. இது, கடந்த ஆண்டை காட்டிலும், 5.5 சதவீதம் அதிகம்.


latest tamil news



அமெரிக்காவில் படிக்க, மாணவர்களை அனுப்பும் நாடுகளில், தொடர்ந்து 10வது ஆண்டாக, சீனா முதலிடம் வகிக்கிறது. 2018 - 19 கல்வியாண்டில், 3.69 லட்சம் சீன மாணவர்கள், இங்கு கல்வி பயில்கின்றனர். இந்த வரிசையில், இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்தியாவில் இருந்து, 2.02 லட்சம் மாணவர்கள், இங்கு படிக்கின்றனர். அமெரிக்காவின் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கையில், சீனா மற்றும் இந்திய மாணவர்கள், 50 சதவீத இடத்தை பிடித்துள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
19-நவ-201917:37:53 IST Report Abuse
Jaya Ram மணவாழ்க்கைக்கு முக்கியத்துவம் இல்லை அப்புறம் எப்படி இந்திய கலாச்சாராம் எதிர்காலத்தில் இருக்கும் விரைவில் அதற்க்கு மூடுவிழா கொண்டாடப்படும்
Rate this:
Cancel
19-நவ-201913:27:27 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இது நமக்கு அந்நிய செலாவணியை தான் அதிகரிக்கும். உள்நாட்டில் படிப்பதே சிறந்தது , முன்னர் அமெரிக்காவில் படித்தவர்களுக்கு அங்கேயே நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது, படித்து முடித்தவுடன் நாட்டிற்கு திருப்பி அனுப்பி விடுகிறார்கள். பணம் தான் விரயம்
Rate this:
Cancel
India is Hindu Nation - Kanyakumari,இந்தியா
19-நவ-201910:44:31 IST Report Abuse
India is Hindu Nation குட்
Rate this:
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
19-நவ-201911:55:26 IST Report Abuse
Bebetoஇந்தியாவிலிருந்து 2 லட்சம் மாணவர்கள் என்றால், அதில் 1.75 லட்சம் ஆந்திராவிலிருந்து தான். காரணம் - ஆந்திராவில் அமெரிக்காவில் படித்த மாப்பிளைக்கு இரண்டு கோடி டௌரி. இந்தியாவில் டிகிரிக்கு 50 லட்சம், என்ஜினீருக்கு 75 லட்சம், டாக்டருக்கு ஒரு கோடி. MD MS க்கு 1.25 கோடி.. இதுதான் இப்போதைய ரேட்....
Rate this:
19-நவ-201913:26:17 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்// டிகிரிக்கு 50 லட்சம், என்ஜினீருக்கு 75 லட்சம்// இது சுத்த பொய் , இந்த காலத்தில் இதற்கெல்லாம் மதிப்பே இல்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X