சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ.,யின் அறியாமை: ஒரு லட்சம் ஏமாந்த பரிதாபம்

Added : நவ 19, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
ராமநாதபுரம்: ராமநாதபுரம் எஸ்.ஐ., கிருஷ்ணமூர்த்தியின் 58, வங்கி கணக்கில் இருந்து மோசடி நபர்கள் ரூ. 99,968 எடுத்துள்ளனர். விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய போலீஸ்காரரே அறியாமையால் ஏமாந்து விட்டார்.ராமநாதபுரம் பஜார் ஸ்டேஷனில் எஸ்.ஐ., ஆக உள்ள கிருஷ்ணமூர்த்திக்கு கனரா வங்கியில் சேமிப்புக் கணக்கு உள்ளது. அக்.9ல் அவரை அலைபேசியில் தொடர்பு கொண்ட நபர், 'உங்கள் ஏ.டி.எம்., கார்டு காலாவதி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் எஸ்.ஐ., கிருஷ்ணமூர்த்தியின் 58, வங்கி கணக்கில் இருந்து மோசடி நபர்கள் ரூ. 99,968 எடுத்துள்ளனர். விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய போலீஸ்காரரே அறியாமையால் ஏமாந்து விட்டார்.

ராமநாதபுரம் பஜார் ஸ்டேஷனில் எஸ்.ஐ., ஆக உள்ள கிருஷ்ணமூர்த்திக்கு கனரா வங்கியில் சேமிப்புக் கணக்கு உள்ளது. அக்.9ல் அவரை அலைபேசியில் தொடர்பு கொண்ட நபர், 'உங்கள் ஏ.டி.எம்., கார்டு காலாவதி ஆகப்போகிறது. கணக்கு எண் விபரத்தை கூறுங்கள்' என கேட்டுள்ளார். அனைத்து விபரத்தையும் கிருஷ்ணமூர்த்தி தெரிவிக்க அவரது கணக்கில் முதலில் ரூ. 39,980 எடுத்தனர். ஒரு மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து ரூ.9,999, ரூ.9,999, ரூ.39,990 எடுக்கப்பட்டது. வங்கி அதிகாரிகளிடம் கிருஷ்ணமூர்த்தி கேட்ட போது ஏமாற்றப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

'வங்கியில் இருந்து பேசுவதாக கூறும் மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம்' என வங்கிகள் மற்றும் போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் எஸ்.ஐ., ஒருவரே ஏமாந்திருப்பது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan S -  ( Posted via: Dinamalar Android App )
19-நவ-201908:41:00 IST Report Abuse
Natarajan S all are getting cheated by fake callers from bamks. nobody is exception. one idea is banks can educate through FM Radio as people regular ly listen thriugh FMs
Rate this:
Cancel
Natarajan S -  ( Posted via: Dinamalar Android App )
19-நவ-201908:41:07 IST Report Abuse
Natarajan S all are getting cheated by fake callers from bamks. nobody is exception. one idea is banks can educate through FM Radio as people regular ly listen thriugh FMs
Rate this:
Cancel
19-நவ-201906:16:23 IST Report Abuse
ஆப்பு சைபர், அதாவது பூஜ்ஜியம் போலூஸ்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X