பொது செய்தி

இந்தியா

சதம் நழுவ தோனி காரணமா? காம்பிர் புது புகார்

Updated : நவ 19, 2019 | Added : நவ 19, 2019 | கருத்துகள் (16)
Share
Advertisement
Gautam Gambhir,Gambhir, MS Dhoni , Dhoni, cricket, worldcup, 2011, final, century, தோனி, காம்பிர், உலக கோப்பை, கிரிக்கெட், சதம், காரணம், தினமலர், dinamalar

புதுடில்லி: ''உலக கோப்பை பைனலில் சதம் நழுவியதற்கு தோனி தான் காரணம்,'' என, முன்னாள் வீரர் காம்பிர் தெரிவித்தார்.

கடந்த 2011ல் இந்தியா, இலங்கை அணிகள் மோதிய உலக கோப்பை தொடரின் பைனல் மும்பையில் நடந்தது. இதில் இந்தியா சாம்பியன் ஆனது. பைனலில் இலங்கை நிர்ணயித்த இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு காம்பிர் 97 ரன்கள் எடுத்து கைகொடுத்தார். 3 ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.


latest tamil newsஇதுகுறித்து காம்பிர் கூறியது: உலக கோப்பை பைனலில்97 ரன் எடுத்த போது என்ன நடந்தது, ஏன் அவுட்டாகினேன் என பலமுறை எனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டுள்ளேன். உண்மையில் எனது நோக்கம் எல்லாம் வெற்றி இலக்கை அடைய வேண்டும் என்பதில் தான் இருந்தது. அந்த நேரத்தில் என்னுடன் பேட் செய்த தோனி அருகில்வந்து, 'இன்னும் மூன்று ரன் தேவை. இதை எடுத்து விட்டால் நீ சதத்தை எட்டி விடலாம்,' என்றார். உடனடியாக எனது மனது மாறியது. தனிப்பட்ட ஸ்கோர் தெரியவர, 100 அடிக்க வேண்டும் என்ற ஆசையால் அவசரப்பட்டு விட்டேன்.

தோனி சொல்லாமல் இருந்திருந்தால் ஒருவேளை சதம் அடித்திருக்கலாம். அவுட்டாகி திரும்பிய போது, இந்த 3 ரன்கள் எனது வாழ்க்கை முழுவதும் தொல்லையாக இருக்கப்போகிறது என நினைத்தேன். அதேபோல, இப்போது வரை பலரும், 'ஏன் அந்த 3 ரன்களை எடுக்கவில்லை,' என கேள்வி கேட்கின்றனர். இவ்வாறு காம்பிர் கூறினார். காம்பிரின் இந்த கருத்துக்கு சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தோனிக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VSK - CARY,யூ.எஸ்.ஏ
19-நவ-201917:15:36 IST Report Abuse
VSK காம்பிர் அப்படி எல்லாம் சொல்லவில்லை . இந்த மீடியாக்காரர்கள்தான் இப்படி எல்லாம் thirikkinRanaenadhu கவனம் சதம் அடிப்பதில் போனது என்று தன் தவற்றை ஒப்புக்கொண்டிருக்கிறார் . நல்லது பண்ணலைன்னாலும் இப்பிடி கெடுதல் பண்ணாம இருங்களேன் .
Rate this:
Share this comment
Cancel
BOOPATHI - AVINASHI,இந்தியா
19-நவ-201915:19:00 IST Report Abuse
BOOPATHI கிரிக்கெட் ல எல்லாருமே இப்படி தான் சொல்ராங்க. 97 அடிக்கும்போது நாம எவ்வளவு ரன் அடிச்சோம்னு தெரியாம போறது நியாயம் தான். அனா bowlers 6 ball ல எத்தனை ball போட்டோம்ணே தெரியாம umpire கிட்ட கேப்பானுக பாருங்க. இதுல 2 umpire 1 bowler, 2 batsman, 1 captain, 1 wicket keeper, 8 fielders இத்தனை பேரும் சேந்து 5 ball ல ஒரு ஓவரா கிளோஸ் பண்ணுவாங்க பாருங்க, அப்போ இருக்குற எல்லாருமே machine மாதிரி தான் ஆடுவீங்களா.
Rate this:
Share this comment
Cancel
Balaji - Chennai,இந்தியா
19-நவ-201913:17:20 IST Report Abuse
Balaji தோனியை கொர சொல்ற மாதிரி ஒண்ணும் தெரிலியே... தோனியும் பெருசா சாதி பண்ணறா மாதிரி அப்புடி சொல்லி இருக்கவும் மாட்டாரே.. ஏதோ ஒரு நிகழ்வு ஞாபகப்பதுத்தப்பட்டிருக்கிறது.. அவ்வளவு தானே? இப்படிப்பட்ட தருணங்கள் யார் வாழ்க்கையிலும் நிகழலாம். இதை வேடிக்கையாக அவர் சொன்னதால தான் உட்டேன் னு சொல்லுவது சாதாரணமான நிகழ்வுதான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X