ஸ்மித்சோனியன் கேலரியில் இந்திரா நூயி படம் சேர்ப்பு

Updated : நவ 19, 2019 | Added : நவ 19, 2019 | கருத்துகள் (5)
Advertisement

இந்த செய்தியை கேட்க

வாஷிங்டன்: சென்னையில் பிறந்து, வளர்ந்தவரும், பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான, இந்திரா நூயியின் படம், அமெரிக்காவில் உள்ள ஸ்மித்சோனியன் தேசிய உருவப்பட கலைக்கூடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் வரலாறு, வளர்ச்சி மற்றும் கலாசாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்தவர்களின் உருவப் படங்களை கொண்ட கலைக்கூடமாகும் ஸ்மித்சோனியன் கேலரி. இது, 1962ல் ஆரம்பிக்கப்பட்டதாகும்.இங்கு அதிபர்கள், கலைஞர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பலரின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சுமார், 23 ஆயிரத்துக்கும் மேலான படங்கள் இங்குள்ளன.

தன்னுடைய உருவப் படம் கலைக்கூடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து இந்திரா நூயி கூறியதாவது: நான் இதுவரை கனவுகூட கண்டிராத ஒரு பாராட்டாகும் இது. தெற்கு ஆசியாவிலிருந்து வந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பின்னணி, நிறம், மதம், இனம் என்ன என்பது முக்கியமில்லை. நாட்டில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துபவர்களை கொண்டாடும் நாடாக இது இருக்கிறது. இந்த நாட்டில் இருப்பது குறித்து நன்றியுள்ளவளாக உணர்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

பெப்சிகோ நிறுவனத்தில், 24 ஆண்டுகள் பணியாற்றி, அதில், 12 ஆண்டுகள் தலைமை செயல் அதிகாரியான பொறுப்பு வகித்து, நிறுவனத்தின் வெற்றிக்கு பெரும்பங்காற்றியவர், இந்திரா நூயி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vivek c mani - Mumbai,இந்தியா
19-நவ-201920:55:08 IST Report Abuse
vivek c mani ஒரு நடிகையை வாக்ஸ் மியூசியம் வைத்தால் அதற்கு பாராட்டுகளும் பெருமிதமும் அளவுக்கு மீறியே காட்டுவார்கள். ஆனால் ஒரு இந்தியா பெண்மணி வெளிநாடு சென்று ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை பொறுப்பேற்று புகழ் ஈட்டி அதற்கு அங்கீகாரம் கிடைத்தால் அதற்கு நம் தமிழர்கள் தருவது ஏளனமும் நிந்தனையும் மட்டுமே. தமிழ் நாடு வற்றியது பெப்சியால் அல்ல . பெப்சி வருவதற்கு முன்பே வறட்சி பெருகியது .காரணம் ஏரிகளும் ஆறுகளும் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டதால் பெருமளவில் பூமியில் நீர் தேக்கும் சக்தியை இழந்தோம். தமிழ் நாட்டில் உண்மையை மறுத்து மற்றும் பொய்யினை பரப்ப பலர் வாழையடிவாழையை வளர்வது புதிதல்ல.
Rate this:
Share this comment
Cancel
Soundar - Chennai,இந்தியா
19-நவ-201916:59:09 IST Report Abuse
Soundar இந்திரா நூயி மற்றும் PepsiCo நிறுவனங்கள் பெருமை பட்டு கொள்ளலாம். ஆனால் இந்தியர்களாக நாம் பெருமைப்பட அவசியம் இல்லை. இந்தியாவின் பெரும்பான்மையான இடங்களில் நிலத்தடி நீர் சரிவிற்கு முக்கிய பங்காற்றியவர் தானே இவர். Excellent comment, Indians need not be proud of her, her fame was at the expense of Indians. We can not forgive the damage done to our country,
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
19-நவ-201908:41:49 IST Report Abuse
Natarajan Ramanathan ஜாதி+மத இட ஒதுக்கீடு இருக்கும்வரை இந்தியாவில் இது சாத்தியமே இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X