பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் வைத்த 'டெஸ்ட்'; தாசில்தார்கள் 'பெயில்'

Updated : நவ 19, 2019 | Added : நவ 19, 2019 | கருத்துகள் (82)
Share
Advertisement
ராமநாதபுரம்: 'ஆதரவற்ற விதவைச் சான்றுக்கான விதிகள் என்ன' என ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவ ராவ் திடீர் தேர்வு நடத்தினார். இதில் தாசில்தார், துணை தாசில்தார்கள் தோல்வி அடைந்தனர்.கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் பரமக்குடியை சேர்ந்த பெண் ஒருவர், 'ஆதரவற்ற விதவைச் சான்று பெற தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தேன். தகுதியில்லை என கூறிவிட்டனர். சான்று
கலெக்டர்,டெஸ்ட்,தாசில்தார்,பெயில்,ராமநாதபுரம், வீரராகவ ராவ்

இந்த செய்தியை கேட்க

ராமநாதபுரம்: 'ஆதரவற்ற விதவைச் சான்றுக்கான விதிகள் என்ன' என ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவ ராவ் திடீர் தேர்வு நடத்தினார். இதில் தாசில்தார், துணை தாசில்தார்கள் தோல்வி அடைந்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் பரமக்குடியை சேர்ந்த பெண் ஒருவர், 'ஆதரவற்ற விதவைச் சான்று பெற தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தேன். தகுதியில்லை என கூறிவிட்டனர். சான்று வழங்க வேண்டும்' என மனு அளித்தார். தாசில்தாரை அழைத்த கலெக்டர் வீரராகவ ராவ், அந்த சான்றுக்கான விதிகள் குறித்து கேட்டார். அதற்கு தாசில்தார், 'ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வருமானம் இருக்க வேண்டும். சொத்து இருக்க கூடாது' என்றார். மற்றொரு தாசில்தாரிடம் கேட்டதற்கு, அவர் வேறு விதிகளை கூறினார்.

இதையடுத்து, 'சான்று பெற என்ன விதிகள் என எழுதி உங்கள் பெயரையும் எழுதிக் கொடுங்கள்' என தாசில்தார், துணை தாசில்தார்களுக்கு உத்தரவிட்டார். பத்துக்கும் மேற்பட்டோர் எழுதிக் கொடுத்தனர்.


latest tamil newsஅதை படித்த கலெக்டர், 'நீங்கள் எழுதியது அனைத்தும் தவறு. 2006 அரசாணையின் படி மாத வருமானம் ரூ.4000க்குள், ஆண்டு வருமானம் ரூ.48 ஆயிரத்திற்குள் இருக்கலாம். மறுமணம் செய்திருக்க கூடாது. இந்த இரண்டு தகுதியும் இருந்தால் சான்று வழங்கலாம். சொந்த வீடு இருந்தலோ, வாடகைக்கு விட்டிருந்தாலோ மாத வருமானம் ரூ.4000க்குள் இருந்தால் அவர்களுக்கும் வழங்கலாம். அரசாணையை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். இது தெரியாமல் விண்ணப்பத்தை நிராகரிப்பது அநீதி' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SSR - Aberdeen,ஆஸ்திரேலியா
25-நவ-201911:14:00 IST Report Abuse
SSR நீங்கள் அனைவரும் நேர்மையான அதிகாரிகளாக இருந்தால் உங்கள் மேஜையில் " நான் லஞ்சம் வாங்க மாட்டேன்" என்று பலகை வைத்து வேலை பார்க்க முடியும்.. ஒருவராலும் முடியாது... .
Rate this:
Cancel
SSR - Aberdeen,ஆஸ்திரேலியா
25-நவ-201911:11:26 IST Report Abuse
SSR Dear Sir உங்களுக்கு தைரியம் இருந்தால் அரசாங்க அதிகாரியின் மேஜையில் இந்த வார்த்தைகளை எழுதி வைக்க சொல்ல உத்தரவு பிறப்பிக்க முடியுமா.. "நான் ஒரு நேர்மையான அதிகாரி.. இங்கு லஞ்சம் கிடையாது... நான் லஞ்சம் வாங்காமல் உங்களுக்கு தேவையான சட்டப்படியான உதவிகளை பண்ண முடியும்"
Rate this:
Cancel
Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-நவ-201911:25:14 IST Report Abuse
Indian Dubai All are appointed by great DMK & Congress & on quota & recommendation basis including the paper chasing. How they know what is meant by Govt service with knowledge. they know only collection of bribe and working as a bribe collector agent. The performance of great DMK & quota tem
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X