காதலித்ததால் ஆத்திரம்: மகளை கொன்ற தாய்

Added : நவ 19, 2019 | கருத்துகள் (15)
Advertisement

இந்த செய்தியை கேட்க

மும்பை: மகள் காதலித்து திருமணம் செய்ய முயற்சித்ததால் ஆத்திரமுற்ற தாய், மகளை துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்ய சம்பவம் மும்பையில் பரபரப்பாக பேசப்படுகிறது.மகாராஷ்ட்டிர மாநிலம் தெற்கு மும்பை அருகே பிதோனி என்ற பகுதியை சேர்ந்தவர் வகேலா 40. இவரது மகள் நிர்மலா 23. இவர் ஒருவரை காதலித்துள்ளார். இவரையே திருமணம் செய்ய போவதாக கூறி வந்துள்ளார். ஆனால் தாயாருக்கு இது பிடிக்கவில்லை. இதனால் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.


இந்நிலையில் நேற்று (18 ம் தேதி) இது தொடர்பாக இருவருக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது. இதனையடுத்து நிர்மலா தனது உடைகளை எடுத்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய போவதாக புறப்பட்டார் நிர்மலா. இதனால் ஆவேசமுற்ற தாயார் ,மகள் நிர்மலாவை அவரது துப்பட்டாவால் நெறித்து துடி,துடிக்க கொன்றார்.

மேலும் அருகில் உள்ள காவல்நிலையத்தில் மகளை கொன்றதை ஒப்பு கொண்டு சரண் அடைந்தார். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
19-நவ-201917:26:59 IST Report Abuse
தமிழ்வேள் She might have been saved her daughter from Love Jihaad. There may be a lot of possibilities for Love jihad
Rate this:
Share this comment
Cancel
Asagh busagh - Munich,ஜெர்மனி
19-நவ-201915:02:48 IST Report Abuse
Asagh busagh பாவம் அந்த மகள். இதுவே அவர் இடத்துல ஒரு ஆண் மகன் இருதிருந்தா? நம் நாட்டில் பெண் செய்தால் குற்றம். அதையே ஆண் செய்தால் தவறு. பிள்ளைகளை ஆண் பெண் வித்தியாசம் பாராமல் சிறு வயது முதலே சுயமாக சிந்திக்க ஊக்குவித்தால், தங்கள் வாழ்க்கைக்கு தேவையான முடிவுகளையும் ஆராய்ந்து எடுப்பார்கள். சில சமயங்களில் முடிவுகளில் பிழை இருக்கலாம், ஆனால் தவுறுகளில் இருந்து கற்று கொள்வதும் வாழ்க்கைக்கு தேவை தான். பிள்ளைகள் பெற்றோர்களின் அடிமைகள் இல்லை. இங்கு கருத்து பதிபவர்களில் சிலர் மாறி வரும் காலத்திற்க்கு ஏற்ப யோசிக்க கூட முடியாத அதிகப்படியான உணர்ச்சியை பெண் பிள்ளைகளின் காதலில் மட்டும் காட்டுவது வருத்தம் அளிக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
19-நவ-201913:06:18 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இது ஒரு உணர்ச்சி பூர்வமான விஷயம், தனியாக ஒரு தாய் தன்னை வளர்த்து ஆளாக்கி இருக்கிறாள், அவளின் எதிர்காலமே நாம் தான் என்கிற பொறுப்புணர்வு அந்த பெண்ணிற்கு இல்லை. அதே போல தன்னை மீறி செல்லும் வாரிசுகளை தண்டிக்க நமக்கு அதிகாரம் இல்லை, அதை கடவுள் பார்த்துக்கொள்வான் என்று விட்டுவிடும் மனப்பக்குவம் அந்த பெண்ணிற்கும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X