தமிழக தலைவர்கள் முதலைகண்ணீர்; ராஜபக்சே மகன் பாய்ச்சல்

Updated : நவ 19, 2019 | Added : நவ 19, 2019 | கருத்துகள் (123)
Advertisement
Srilanka, NamalRajapaksa, Rajapaksa, Tamilnadu, Politicians, இலங்கை, நாமல்ராஜபக்சே, தமிழக, அரசியல், தலைவர்கள்

இந்த செய்தியை கேட்க

கொழும்பு: தமிழக அரசியல் தலைவர்கள் ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதுபோல் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர் என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன் நாமல் விமர்சித்துள்ளார்.

இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இளைய சகோதரரான கோத்தபயா ராஜபக்சே, 70, அபார வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட, ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் பிரேமதாசாவை விட, 13 லட்சம் ஓட்டுகள் அதிகம் பெற்று, அவர் வெற்றி பெற்றார். இவர் நேற்று (நவ.,18) அதிபராக பதவியேற்றார். இவரின் வெற்றிக்கு தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் எதிர் கருத்தை பதிவிட்டனர்.




இந்நிலையில், முன்னாள் அதிபர் ராஜபக்சே மகனும் எம்.பி.,யுமான நாமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக அரசியல் தலைவர்களை கடுமையாக சாடினார். அந்த அறிக்கை: தமிழக அரசியல் தலைவர்கள், சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைக்க ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதுபோல் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர். அதில் சிலர் சுயநலத்துடன் சந்தர்ப்பவாத அறிக்கைகளை விடுகின்றனர். அவர்கள், எம் மக்களுக்காக அரசியலை தவிர வேறென்ன ஆக்கபூர்வமான விஷயத்தை செய்திருக்கிறார்கள்?





திமுக - திருமாவளவன்

2009ல் யுத்தம் முடிந்ததும், திமுக.,வின் பாராளுமன்ற குழுவினர் இலங்கை வந்து, ராஜபக்சேவுடன் சிநேகமாக பழகினர். அதிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எங்களுடன் சிநேகமாக கலந்துரையாடி அனைத்தையும் அறிந்து கொண்டார். அத்தகையவர் இன்று சந்தர்ப்பவாத அறிக்கை விடுவது அதிர்ச்சியாக உள்ளது.
புதிய அதிபரை விமர்சிப்பதை விட்டுவிட்டு, நடைமுறை அரசியலில் இலங்கை தமிழ் மக்களை பற்றி சிந்திப்பது சிறந்தது. உளவுப்பூர்வமாக நேசித்தால் ஈழத்தமிழர்களின் எதிர்கால வாழ்வு சுபிட்சமாக அமைய பொறுப்புடன் செயல்படுங்கள். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


முழு அறிக்கை:

Advertisement




வாசகர் கருத்து (123)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy - Chennai,இந்தியா
22-நவ-201914:06:21 IST Report Abuse
Parthasarathy எனக்கு ஒரு சநதேகம் . இவர்கள் சீனாவிடம் இலங்கை மூலம் காசு பெற்றுக்கொண்டு ஸ்டெர்லிட்ஐ எதிர்கிறார்களோ ?
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
20-நவ-201913:43:33 IST Report Abuse
skv srinivasankrishnaveni தமிழ்நாடு என்ற நல்லபெயரை டாஸ்மாக்கினாடு என்று ஆக்கிவிட்ட உத்தமர்கள்தான் இந்த திமுக அண்ட் அதிமுக கூட்டம் எல்லாம் இவளோட பினாமிக்களோடதுதான் எதுவுமபினாத்தும் கூட்டம் கேவலமான அசிங்கமான பணம் பnணிகள்
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
19-நவ-201921:09:37 IST Report Abuse
elakkumanan கறிக்கடை வாசலில் இருக்கும் விலங்கு அங்கேயே இருக்க வேண்டும் என்று யாரும் கட்டுப்படுத்த முடியாது. அது கரி கடைக்காரரின் சொந்த பிராணியாக இருக்காது வழக்கமாக. அந்த விலங்குகளே தங்களுக்குள் சண்டை போட்டு ஏரியா பிரித்து சொந்தம் கொண்டாடும் காலம் காலமாக. கறிக்கடை விடுமுறை தினத்திலோ அல்லது, கடை மூடிய பிறகோ , வயிற்று பாட்டுக்கு நாலு தெரு சுத்தி வரும். சில நேரம், கல்யாண , விருந்து வீடுகள் கூட சிக்கும். சில சமயம், கல்லெறி மட்டுமே கிடைக்கும். சில சமயம், இரன்டுமே கிடைக்கும். எந்த கறிக்கடை விலங்கும் முதலாளியின் எதிரி வீட்டு எலும்பை மறுக்காது. அது, வயிறுக்கான தேவை. அங்கே, மூளைக்கு என்ன வேலை. ? இதுவே அந்த விலங்கின் வாழ்க்கை முறை... .வயிறு வளர்க்கும் முறை. ஆல் இன் தி கேம் யா. இதுதான் எங்கள் வாழ்க்கை... இந்த வாழ்வியல் இந்த கட்டுரை சூழலுக்கு பொருந்தினால், அது வேறு தற்செயலே. எச்சில் சோறு தின்னும் விலங்கு எந்த கொள்கையும் வைத்துக்கொள்ளாது. வயிறே பிரதானம். எச்சில் இல்லை. மானம் என்பது மனித குலத்தின் கண்டுபிடிப்பு. இந்த பாழாய் போன மனிதர்களின் கெட்ட பழக்கம் ........தன்னோட வளர்ப்பு பிராணியும் தயிர் சோறு மட்டும்தான் சாப்பிடவேண்டு என்று நினைப்பது. ....விலங்குகள் ........சுதந்திரமானவை..............மனித தன்மை அற்றவை................. குருமா, மற்றும் தீயமுக கூட்டம் எழவு வீட்டில் கரி விருந்து தின்னதை சொல்லி காட்டிபுட்டாப்ல சின்ன பையன்...கெடச்ச வீட்டுல எல்லாம் கை நனைச்சா இப்பிடித்தான்..................தேவர் மகன் வசனம்.....எதிரி வீட்டு ..............தின்ன வந்தீர்களோ......மக்களுக்கு வேண்டும் விழிப்புணர்வு...இந்த கழகம் ஏதோ இந்த தமிழ் மக்களை காப்பியாத்தவே பொறந்ததாக இன்னும் சில கூட்டம் கூவுதுக...............கருமம் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X