அரசியல் செய்தி

தமிழ்நாடு

அஜித்தை அரசியலுக்கு இழுக்க அ.தி.மு.க., முயற்சி?

Updated : நவ 19, 2019 | Added : நவ 19, 2019 | கருத்துகள் (27)
Share
Advertisement
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி சமீப காலமாக ரஜினிகாந்த் விமர்சித்துப் பேச ஆரம்பித்துள்ளார். ரஜினிக்கு போட்டியாக அஜித்தை கட்சிக்குள் இழுக்க சில அதிமுக அமைச்சர்கள் முயற்சி செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.‛‛எப்போது வேண்டுமானாலும் அதிசயம் நடக்கலாம். முதல்வர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவு கூட கண்டிருக்க மாட்டார். அவர் முதல்வர் ஆகவில்லையா. நாளை

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி சமீப காலமாக ரஜினிகாந்த் விமர்சித்துப் பேச ஆரம்பித்துள்ளார். ரஜினிக்கு போட்டியாக அஜித்தை கட்சிக்குள் இழுக்க சில அதிமுக அமைச்சர்கள் முயற்சி செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‛‛எப்போது வேண்டுமானாலும் அதிசயம் நடக்கலாம். முதல்வர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவு கூட கண்டிருக்க மாட்டார். அவர் முதல்வர் ஆகவில்லையா. நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்'' என்று கமல்ஹாசன் பிறந்த நாள் விழாவில் ரஜினி பேசி இருந்தார். இந்த பேச்சு, அதிமுக அமைச்சர்களுக்கு ஆத்திரத்தை வரவழைத்துள்ளது.latest tamil newsஅதிமுக கட்சி நாளேட்டிலும், அமைச்சர்களும் ரஜினிக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். நேற்று விருதுநகரில் நடந்த விழாவில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நிருபர்களிடம், “ரஜினி, கமல், விஜய் ஆகியோர் மட்டும் தான் அரசியலுக்கு வர வேண்டுமா, எங்க தல அஜித் வரக் கூடாதா,” எனக் கூறியிருந்தார்.

இந்த பேச்சு, மறைமுகமாக சில செய்திகளை சொல்வதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அவர்கள் கூறும்போது, ‛‛மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது அபிமானம் கொண்டவராகவும், அதிமுக அனுதாபி ஆகவுமே தன்னைக் காட்டிக் கொண்டவர் அஜித். கருணாநிதி முதல்வராக இருந்த போது ஒரு விழாவில் நேரடியாகவே திமுக அரசை கேள்வி கேட்டவர் அஜித். அந்த விஷயமும் அவரை அதிமுக அனுதாபியாக காட்டியது.


latest tamil newsரஜினி, கமல் தற்போது தீவிர அரசியல் களத்தில் இறங்க உள்ளனர். நடிகர் விஜய்யும் அரசியல் கனவில் மிதப்பதாக தெரிகிறது. எனவே இவர்களை சமாளிக்க அஜித்தை அரசியலில் இழுக்கும் வேலைகளை அதிமுக ஆரம்பித்து விட்டது போல் தெரிகிறது'' என்றனர்.

வழக்கம் போல கண்டுகொள்ளாமல் அமைதியாக இருப்பாரா அல்லது அறிக்கை ஏதாவது அஜித் வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
19-நவ-201919:42:08 IST Report Abuse
Sampath Kumar நடிகனுக்கு இவங்களை பற்றி எல்லாம் நாகா பயப்பட மாட்டோம் என்று மர் தட்டி விட்டு இப்போ என்ன குறுக்கு வேலை அசிங்கமாக இல்லை கேட்டால் அரசியில் எது எல்லாம் சாதாரணம் என்று சொல்லி விடுவார்கள்
Rate this:
Cancel
19-நவ-201918:31:20 IST Report Abuse
ஆப்பு தல அரசியலுக்கு சஇப்பட மாட்டாரு. சொந்த பட வெளியீட்டு விழாவுக்கே வர்ராதவரு... ஏதோ அவருக்கும் கூத்தாடி பொழப்பு ஓடுது. அப்புடியே இருக்க உடுங்க.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-நவ-201917:54:21 IST Report Abuse
தமிழவேல் அஜித்துக்கு 70 தா ஆகுது ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X