சபரிமலை முத்து

Updated : நவ 19, 2019 | Added : நவ 19, 2019
Share
Advertisement

latest tamil news
சமையல் கலைஞர்களுக்கு உதவியாக சமையல் பாத்திரம் கழுவிக்கொடுக்கும் வேலை பார்த்தவர் இன்று சபரிமலை சன்னிதானம் வரும் பல ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சுவையான உணவு தந்துவருகிறார்.

அவர்தான் முத்து

தேனி மாவட்டம் கூடலுரைச் சேர்ந்தவர் , ஏழாவது வரை படித்தவர் அதற்கு மேல் படிப்பு ஏறாத நிலையில் பிழைப்பு தேடி சிறுவனாக இருக்கும் போதே சபரிமலை சென்றார்.


latest tamil news
பக்தர்கள் இருக்குமிடத்தில் தேடிப்போய் பிளாஸ்க்கில் டீ விற்கும் வேலை கிடைத்தது நுாறு ரூபாய்க்கு டீ விற்றால் பதினைந்து ரூபாய் கமிஷன் பகல் முழுவதும் டீ விற்பார், இரவில் சமையல் செய்யும் சாமிகளுக்கு உதவியாக பாத்திரம் கழுவி கொடுப்பார் அதில் கொஞ்சம் பணம் கிடைக்கும்.

இந்த நிலையில் இவரது நேர்மை மற்றும் விசுவாசத்தை பாராட்டி இவரது டீ கடை முதலாளி மூன்று பிளாஸ்க்கை பரிசாக கொடுத்து இனி நீ சொந்தமாய் டீ தயார் செய்து விற்று பிழைத்துக் கொள் என்று சொல்லிவிட்டார்.

இரண்டு பேரை ஊரில் இருந்து கூட்டிப்போய் டீ வியபாரம் செய்தார், அப்போது பலரும் சபரிமலையில் நல்ல சாப்பாடு கிடைக்காமல் சிரமப்படுவதை உணர்ந்தார்.

அதே நேரம் பாத்திரம் கழுவி கொடுக்கப் போன இடத்தில் ,சமையலின் நேர்த்தியை கற்றுக்கொண்டதை வைத்து சிறிய அளவில் சமையல் செய்து கேட்கும் சாமிகளுக்கு சாப்பாடு வழங்கினார்.

தரமான பொருட்களாலான இவரது சாப்பாடு காரணமாக இவருக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர், தேவஸ்தானத்தில் ஒட்டல் நடத்த முறைப்படி அனுமதி பெற்றார்.ஸ்ரீ ஹரிபவன் என்ற உணவகம் நடத்திவருகிறார்.சபரிமலையில் உணவகம் நடத்தும் ஒரே தமிழர் இவர்தான்.

சபரிமலையி்ல் கேரளாக்காரர்களின் ஒட்டல்கள் நிறைய இருந்தாலும் இவரது கடையில்தான் கூட்டம் நிரம்பும அவ்வளவு ஏன் கேரள மக்களே இவரது ஒட்டலுக்குதான் தேடிப்போய் சாப்பிடுவர்.

இப்போது இவருக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா,ஆந்திரா,கர்நாடா மற்றும் வடமாநிலங்களில் இருந்தெல்லாம் எங்கே முத்து உணவகம்? என்று கேட்டு வந்து சாப்பிட்டுவி்ட்டுச் செல்கின்றனர்.

இட்லி,தோசை,பொங்கல்,பூரி,வடை என்று காலையிலும் மதியம் முழுச்சாப்பாடும்,இரவி்ல் சாப்பாத்தி புரோட்ட மசால் தோசை என்றும் பலவிதங்களில் வழங்குகிறார், சீசன் நேரத்தில் இவரது ஒட்டல் 24 மணி நேரமும் இயங்கும், தம்பி தெய்வேந்திரன் உடனிந்து உதவுகிறார்.

ஏழாவது வகுப்பைத் தாண்டாத முத்து இப்போது மலையாளம்,தெலுங்கு,கன்னடம்,இந்தி,ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் பேசும் வல்லமையை வளர்த்துக் கொண்டுள்ளார்.சபரிமலையில் வேலை இல்லாத நாட்களில் ஊரில் விவசாயம் பார்க்க சென்றுவிடுவார்.

சபரிமலை ஐயப்பனை நம்பி வந்தேன் இப்போது நான் 90 பேருக்கு வேலை கொடுத்து வருகிறேன் வந்து 26 வருடமாகிவிட்டது சுவாமி ஐயப்பன் என்னை மிகவும் நன்றாக வைத்துள்ளார் சபரிமலை முத்து என்றால் பலரும் என்னை நன்கு அறிவர் அந்த அளவிற்கு ஆட்களை சம்பாதித்து வைத்துள்ளேன். நல்ல மனிதர் நியாயமான விலையில் நல்ல சாப்பாடு போடுகிறார் என்ற பெயரைச் சம்பாதித்துள்ளேன் இதுவே எனக்கு மனநிறைவு இந்த வாழ்க்கை போதும் என்று சொல்லும் முத்துவிடம் ஒரு வார்த்தை போன் போட்டு சொல்லிவிட்டு சபரிமலை சென்றீர்கள் எத்தனை பேர் என்றாலும் அத்தனை பேருக்கும் தரமான சுவையான உணவை கொடுப்பார் அவரது எண்:9486258879.

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X