பொது செய்தி

இந்தியா

சபரிமலைக்கு 139 தமிழக பெண்கள்; அனுமதிக்குமா கேரள அரசு

Updated : நவ 19, 2019 | Added : நவ 19, 2019 | கருத்துகள் (26)
Share
Advertisement
திருவனந்தபுரம்: சபரிமலைக்கு செல்லும் பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டு வரும் வேளையில், தமிழகத்தை சேர்ந்த 139 பெண்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர்.கேரள மாநிலம் சபரிமலை அயப்பன் கோவிலில் பெண்கள் அனுமதி தொடர்பான வழக்கு சில தினங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே
Kerala, Sabarimala, Permission, கேரளா, சபரிமலை, பெண்கள், அனுமதி

இந்த செய்தியை கேட்க

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு செல்லும் பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டு வரும் வேளையில், தமிழகத்தை சேர்ந்த 139 பெண்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர்.

கேரள மாநிலம் சபரிமலை அயப்பன் கோவிலில் பெண்கள் அனுமதி தொடர்பான வழக்கு சில தினங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை தடையில்லை என உத்தரவிட்டது. இதன் மூலம் இப்போதும் இளம்பெண்கள் கோவிலுக்கு செல்லலாம் என்ற நிலையே நீடிக்கிறது.


latest tamil news


நீதிமன்ற அனுமதி இல்லாமல் கோவிலுக்கு வரும் 10 முதல் 50 வயதுள்ள பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என கேரள அரசு அறிவித்தது. ஆனாலும், தரிசனம் செல்ல பல பெண்கள் விருப்பம் தெரிவித்து, அதற்காக ஆன்லைனில் முன்பதிவும் செய்துள்ளனர். கேரளா தேவஸ்தான அதிகாரிகள் வெளியிட்ட தகவலில், தற்போது வரை 319 இளம்பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.

ஆந்திராவை சேர்ந்த 160 பேரும், தமிழகத்தை சேர்ந்த 139 பேரும் பதிவு செய்துள்ளனர் எனவும், கேரளாவில் இருந்து ஒருவர் கூட பதிவு செய்யவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. முன்பதிவு செய்தவர்களை தரிசனம் செய்யவிடாமல் கேரள அரசும், தேவஸ்தான போர்டும் அனுமதிக்காது என கூறப்படுகிறது.


12 வயது சிறுமை தடுத்து நிறுத்தம்


இதனிடையே, சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய வந்த 12 வயது சிறுமியை போலீசார் தடுத்து நிறுத்தி போலீசார் திருப்பி அனுப்பினர். இளஞ்சிவப்பு வண்ண உடையணிந்திருந்த சிறுமியை கோவிலில் இருந்து 9 கி.மீ., தொலைவில் உள்ள பம்பை முகாமிற்கு போலீசார் அழைத்து சென்றனர். அவர் சிறுமி தான் என அடையாள அட்டைகளை காண்பித்து போலீசாரை சமாதானப்படுத்த சிறுமியின் தந்தை மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. அந்த சிறுமி புதுச்சேரியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவர்களது அடையாள அட்டைகளை பரிசோதித்த போலீசார், சிறுமியை மட்டும் பம்பை முகாமிற்கு அனுப்பிவிட்டு, குடும்பத்தினரை கோவிலுக்கு செல்ல அனுமதித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
20-நவ-201906:14:23 IST Report Abuse
sridhar @Dr.Kannan. Why this sudden love for the divine trinity. You are an agnostic. Mind your business or go to church and get exposed to the perversions of the pastors there. Only women of a particular age group are barred entry into the Sabarimala temple.
Rate this:
Cancel
Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-நவ-201902:03:20 IST Report Abuse
Indian Dubai First of all India is a Hindu country and no one has any rights to speak about Hindu temples & procedures including Supreme court? Is there any Christians before 1700 or any muslims before 1200? all are converted forcefully will fully etc. The supreme court collegium by the great Congress & alliance and they want to spoil Hindu cultures in India. We should oppose all the stupid judgements like these. According to the great supreme court you can have affair with any one both married or unmarried which is legal but prostitution is illegal. They legally allowed lesbian & homo. Where we are travelling and they are spoiling discipline of India by showing western stupid formula of freedom to all. We don't want any one's appreciation or guidance and lets live as Hindu by following our elders advise and cultures properly. DMK & alliance are spoiling the same Hindu cultures in Tamilnadu from Anna period onwards. People in Tamilnadu should avoid those parties who totally standing as Anti Hindus. They don't have any guts to speak about Christians & Islam religious things and they have not even did any good thing to them also but claiming as they are the guardians for minorities. All Hindu should wake up now
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
20-நவ-201901:40:52 IST Report Abuse
Aarkay கடவுள் நம்பிக்கை உள்ளவரும், இந்து மதத்தை கடைபிடிப்பவர் மட்டுமே செல்லவேண்டும் வீம்புக்கு செல்லும் திராவிட, நாத்திக, மற்றும் பாவாடை கோஷ்டிகள் செல்லத்தேவையில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X