
புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்யசாய்பாபாவின் ஜெயந்தி விழா கொண்டாட்டம்.
ஸ்ரீ சத்யசாய்பாபாவின் 94வது ஜெயந்தி விழா புட்டபர்த்தியில் நடந்துவருகிறது
ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டம் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீசத்யசாய்பாபாவின் ஆஸ்ரமத்தில் அவருடைய 94வது ஜெயந்தி விழா விமரிசையாக நடந்து வருகிறது.

விழாவின் ஒரு நிகழ்வாக இன்று மகளிர் தின விழா நடைபெற்றது வரும் 20 ந்தேதி மலைவாழ் மக்களின் முன்னேற்றம் மற்றும் மானிடத்தை உய்விக்க வந்த மகான் என்ற தலைப்பிலான கருத்தரங்குள் நடைபெறுகிறது. 21 ந்தேதி நாராயண சேவையின் முக்கியத்துவம் பற்றிய கருத்தரங்கும் அன்பே புனிதமானது என்ற தலைப்பிலான சொற்பொழிவும் நடைபெறுகிறது.

22 ந்தேதி ஸ்ரீ சத்ய சாய் நிகர் நிலைப்பல்கலையின் 38 வது பட்டமளிப்பு விழா மற்றும் மாணவர்களி்ன் நாடகமும் நடைபெறும்.

23 ந்தேதி மிக முக்கிய விழாவான பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் பிறந்த தின விழா கொண்டாடப்படுகிறது.விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கலந்து கொள்கிறார்.அன்று மாலை தங்க தேரோட்டமும், மாலையில் மல்லாடி சகோதரர்களின் இசை நிகழ்வும் நடைபெறுகிறது.

24 ந்தேதி சர்வதேச சத்ய சாய் அறக்கட்டளையி்ன் உறுப்பினர்களின் அனுபவங்களும் மாலையில் தாய்லாந்து குழுவினரின் நாடகமும் நடைபெறும்.

விழாவினை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடக்கும் பிரசாந்தி நிலையம் உள்ளீட்ட முக்கிய பகுதிகள் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.
-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE