முரசொலி இடம் பஞ்சமி நிலமா? இல்லையா?: திமுக - பாஜ., மோதல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முரசொலி இடம் பஞ்சமி நிலமா? இல்லையா?: திமுக - பாஜ., மோதல்

Updated : நவ 19, 2019 | Added : நவ 19, 2019 | கருத்துகள் (65)
முரசொலி, பஞ்சமி, நிலம், திமுக, பாஜ, ஆர்எஸ்பாரதி, சீனிவாசன், விசாரணை, ஆதாரங்கள்

இந்த செய்தியை கேட்க

சென்னை: முரசொலி பத்திரிகை அலுவலகம், பஞ்சமி நிலமா இல்லையா என்பதை அறிய விசாரணைக்கு ஆஜரான திமுக., மற்றும் பாஜ., ஆதாரங்கள் தொடர்பாக மாறி மாறி விமர்சித்தனர்.

'சென்னையில், முரசொலி நாளிதழ் அலுவலகம், பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டினார். சர்ச்சை இது, அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. நிலத்தின் பட்டா ஆவணங்களை ஸ்டாலின் வெளியிட்டதும், 'மூலப் பத்திரத்தை வெளியிடுங்கள்' என, ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என பாஜ., மாநில செயலாளர் சீனிவாசன் புகார் மனு அளித்திருந்தார். இரு தரப்பில் இருந்தும் ஆதாரங்களுடன் இன்று (நவ.,19) விசாரணைக்கு ஆஜராகினர்.




திமுக., சார்பில் ஆஜரான ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் தொடர்பான அனைத்து ஆவணங்களுடன் ஆஜரானோம். ஆனால், எங்கள் மீது புகார் கொடுத்த சீனிவாசன் மற்றும் தலைமை செயலர் அவகாசம் கேட்டனர். விசாரணைக்கு வாய்தா கேட்டது மூலமே புகார் அளித்தவர்களின் நிலையை தெரிந்து கொள்ளலாம். அவர்களால் எந்த ஆதாரங்களையும் கொடுக்க முடியவில்லை.
அது பஞ்சமி நிலமா இல்லையா என்பதை அரசால் ஒரு மணி நேரத்தில் கண்டறியலாம். ஆனால், ஸ்டாலினின் வளர்ச்சி பிடிக்காமல் வேண்டுமென்றே அவதூறு பரப்புகின்றனர். புகார் தெரிவித்தவர் மீதும், இந்த பொய்யை முதலில் சொன்ன பாமக., நிறுவனர் ராமதாஸ் மீதும் அவதூறு வழக்கு தொடருவோம். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.




பின்னர், புகார் அளித்த சீனவாசன் கூறுகையில், ஆவணங்கள் தர மாநில அரசு அவகாசம் கேட்டுள்ளது. இடைக்கால அறிக்கை அளிக்கவிருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. எங்களிடம் இருந்த ஆதாரங்களை விசாரணை கமிஷனிடம் அளித்துவிட்டோம். அது பஞ்சமி நிலம் இல்லை என அவர்கள் தான் நிரூபிக்க வேண்டும், என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X