சென்னை: தேவைப்பட்டால் ரஜினியுடன் இணைந்து செயல்படுவேன் என கமல் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்று சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி:

படிக்காத எனக்கு முதன்முறையாக டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எடப்பாடி பழனிசாமி குறித்து ரஜினி சொன்ன அதிசயம் உண்மை தான். நானும் , ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம்.

தமிழகத்தின் மேம்பாட்டிற்காக நானும் ரஜினியுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம். இலங்கை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தபய ராஜபக்சே நியாயமான ஆட்சியை வழங்க வேண்டியது அவரது கடமை. இவ்வாறு நடிகர் கமல் கூறினார்.