டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'டெங்கு' காய்ச்சலால் உயிரிழப்பு அதிகரிப்பு

Updated : நவ 19, 2019 | Added : நவ 19, 2019 | கருத்துகள் (6)
டெங்கு, உயிரிழப்பு, தமிழகம்

சென்னை: தமிழகத்தில், 'டெங்கு' உள்ளிட்ட பல வகை காய்ச்சலால், 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

தமிழகத்தில், இந்தாண்டு செப்டம்பர் முதல், 'டெங்கு, நிமோனியா' உள்ளிட்ட காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. காய்ச்சலால், வாரத்தில் ஓரிருவர் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன. இதுவரை, 10க்கும் மேற்பட்ட குழந்தைகள், பல்வேறு விதமான காய்ச்சலால் உயிரிழந்துள்ளன. அதில், ஏழு குழந்தைகளுக்கு, டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு, 5க்கும் குறைவான குழந்தைகள் தான் உயிரிழந்தன. இதற்கு, பெற்றோர் தான் காரணம் என, சுகாதாரத் துறை குற்றம் சாட்டி உள்ளது.





இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதவாது: குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால், டாக்டரிடம் உரிய சிகிச்சை பெற வேண்டும். தானாக மருந்துகளை உட்கொள்ளக் கூடாது என்ற, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பெரும்பாலான மக்கள், வீட்டில் இருக்கும் காய்ச்சல் மாத்திரையை, குழந்தைக்கு கொடுக்கின்றனர். அதன்பின், உடல்நிலை சரியாகாத நிலையில், கடைசி நேரத்தில், மருத்துவமனைக்கு வருகின்றனர். குறிப்பாக, டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்கு என, வழிமுறைகள் உள்ளன. அதை, மக்கள் உணர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X