பொது செய்தி

இந்தியா

பிரசாந்தி நிலையத்தில் பெண்கள் தின விழா

Updated : நவ 19, 2019 | Added : நவ 19, 2019
Advertisement
பிராசந்தி நிலையம்,சுவாமி சத்ய சாய்பாபா,

சென்னை: உலகம் முழுவதும் உள்ள சாய் பக்தர்களுக்காக, பிராசந்தி நிலையத்தில், பெண்கள் தின விழா, இன்று(நவ.,19) கொண்டாடப்பட்டது.

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில், பிராசந்தி நிலையம் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டு தோறும் நவ., 19ம் தேதி, பெண்கள் தின விழா கொண்டாடப்படுகிறது.

கடந்த, 1995 முதல், இந்த தினத்தில், சமூகத்தில், ஆன்மிகத்தில் புரட்சி ஏற்படுத்திய, சிறந்த பெண்களை அழைத்து, சுவாமி பங்கேற்க செய்வார். இன்றைய பெண்கள் தினம், சத்ய சாய் பாபாவின் சுப்ரபாதத்துடன் சிறப்பாக துவங்கியது. தொடர்ந்து, சோபான சுவாமிநாதனின் வீணை இசை நிகழ்ச்சி உட்பட, பல்வேறு பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன.

விழாவில், தெலுங்கானா கவர்னர், தமிழிசை சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: சுவாமி சத்ய சாய்பாபா உடனான, எனது ஆன்மிக அனுபவம் நெகிழ்ச்சியானது. எனக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவை, சுவாமி தன் கைகளால் தொட்டு குணப்படுத்தினார். அது, என்னை அதிசயிக்க வைத்த, அற்புதமான நிகழ்வு. ஒரு சாதாரண பக்தையாக, பிரசாந்தி நிலையத்திற்கு, என்னால் வர முடியவில்லை. ஆனால், தெலுங்கானா கவர்னராக தற்போது வந்துள்ளேன். இந்த புகழும், சுவாமியையே சேரும்.இவ்வாறு அவர் பேசினார். விழா குழுவை சேர்ந்த ராஜேஸ்வரி, நீலம் தேசாய் உட்பட பலர், விழாவில் பங்கேற்றனர்.


மாலை நிகழ்ச்சிகள்



இதன் பின்னர் மாலையில், நிகழ்ச்சி, ஈஸ்வரம்மா ஆங்கில நடுநிலை உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் வேத நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமானது.

பின்னர், சத்யசாய் சர்வதேச அமைப்பின், உயர் அதிகாரியான இத்தாலியை சேர்ந்த அலிடா பார்க்ஸ் பேசுகையில், பெண்கள் தினத்தின் சிறப்புகள் குறித்தும், சத்யசாய்பாபாவிடமிருந்து கற்று கொண்ட பாடங்கள் குறித்து விளக்கினார்.
அவர் மேலும் பேசுகையில், சத்யசாய்பாபா கூறிய, ' கடவுளிடம் அன்பு, பாவம் மீது பயம், சமூகம் மீது அறநெறி ' ஆகியவற்றை கடைபிடித்தால், வளர்ச்சி பெறுவது நிச்சயம். இதனை பகவானிடம் இருந்து நேரடியாக பெற்றேன். பெண்கள் அனைவரும், குறிப்பாக சத்யசாய் சர்வதேச அமைப்பில் இருக்கும் பெண்கள், இதற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அன்பே அனைத்திற்கும் மூலதனம். பாதை, லட்சியம். அனைவரும், விலங்குகள் மீது அன்பு செலுத்துவதுடன், நாம் வாழும் பூமிக்காக சேவை செய்ய வேண்டும் என்றார்.

இதன் பின்னர், சர்வதேச இளைஞர்கள் அமைப்பு சார்பில் இசை நிகழ்ச்சி நடந்தது. சாய்பாபா மிகவும் விரும்பும், ஆரம்ப பள்ளிக்குழந்தைகள், , கடவுள் ராமர், கிருஷ்ணனர், சத்யசாய் பாபாவின் பிறப்புகள் மற்றும் பெருமைகள் குறித்து விளக்கினர்.

பின்னர், சாய்பாபாவின் ஆசி பெற்ற குழந்தைகள், விளக்குகளை ஏந்தியபடி , அணிவகுத்து சென்றனர். ஈஸ்வரம்மா நடுநிலைஉயர்நிலை பள்ளி குழந்தைகள் பஜனை நடத்தினர். தொடர்ந்து மங்கள ஆரத்தியுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X