ஹிட்லரின் தங்கை போல் கவர்னர்: நாராயணசாமி காட்டம்

Added : நவ 19, 2019 | கருத்துகள் (4)
Advertisement
ஹிட்லரின் தங்கை போல் கவர்னர்: நாராயணசாமி காட்டம்

புதுச்சேரி: அமைச்சரவை முடிவுகளில் கவர்னர் தலையிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டும் கவர்னர் மாளிகையில் அமர்ந்து கொண்டு தர்பார் நடத்துகிறார் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கொந்தளிப்புடன் பேசினார்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாளையொட்டி, இன்று புதுச்சேரி காங். சார்பில் கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.இதில் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புதுச்சேரி துணை நிலை கவர்னராக மாஜி ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி நியமிக்கப்பட்ட நாள் முதல் முதல்வர் , கவர்னர் மோதல் அன்றாட பிரச்னையாக உருவெடுத்து வருகிறது.இன்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி ,கவர்னர் கிரண்பேடி மீது சரமாரியாக குற்றச்சாட்டை சுமத்தி கொந்தளிப்புடன் பேசினார்.
நாராயணசாமி பேசியது, எந்த அதிகாரங்களும் இல்லாத கவர்னர் , எனது அமைச்சரவை விவகாரங்களில் தலையிடுகிறார். நீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை மதிக்காமல் ,மாநில மக்களையும், வளர்ச்சியையும் பற்றி கவலைப்படாமல் கவர்னர் மாளிகையில் அமர்ந்து கொண்டு அதிகாரிகளை மிரட்டி 'தர்பார்' நடத்துகிறார். சர்வாதிகாரி ஹிட்லரின் தங்கை போல செயல்படும் கவர்னரிடம் செயலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
20-நவ-201905:58:46 IST Report Abuse
தாண்டவக்கோன் //நீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை மதிக்காமல் ,// என்னிக்கி மதிச்சிருக்கானுங்களாம்
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
20-நவ-201905:56:54 IST Report Abuse
தாண்டவக்கோன் போலெல்லாம் கடயாது, அதுக்கும் மேல
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
20-நவ-201900:19:56 IST Report Abuse
Matt P புதுச்சேரி: அமைச்சரவை முடிவுகளில் கவர்னர் தலையிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டும் ....தர்பார் நடத்துகிறார் என்றால் உங்களை விட அவர் ஆளுநர்களின் பொறுப்புகளை தெரிந்து கொண்டு தான் அரசியல் நடத்துகிறார் என்று பொருள் ...இதுக்கு தான் உங்க நண்பர் சுடலை யார் தலையீடும் இருக்க கூடாது என்று மாநில சுயாட்சி கேட்கிறார்., வளர்ச்சியையும் பற்றி கவலைப்படாமல் கவர்னர் மாளிகையில் அமர்ந்து கொண்டு அதிகாரிகளை மிரட்டி 'தர்பார்' நடத்துகிறார். ...அவர் அதிகாரிகளை மிரட்டுகிறார் என்றால் ..அதையெல்லாம் நம்ப முடியாது. அவர் போலீஸ் அதிகாரியாகவெல்லாம் இருந்து அனுபவம் பெற்றவர். நீங்கள் அதிகாரிகளை மிரட்ட வேண்டும் என்று எல்லாம் அவசியம் இல்லை. அன்பாக பணிந்து பேசி உங்கள் கட்சிகளுக்கு தான் வாங்க வேண்டியதை எப்படி வாங்க வேண்டும் என்று தெரியுமே. ..அரசியலுக்கு வந்தால் கொசு கடிக்குதே மூட்டை கடிக்குதே என்று இருந்தால் அரசியலை விட்டு விலகுவது நல்லது. ஆளுநர் என்பர் மாநிலத்தின் முதல் குடிமகன் . அனுசரித்து மக்களுக்காக ஆட்சி செய்வது நல்லது. ஆளுநர் எங்காவது பணம் பறிக்க முயற்சிக்கிறார் என்றால் நிரூபிக்கவும். உங்களை போன்ற அரசியல்வாதிகளை கையும் களவுமாக பிடித்து கொடுப்பது அவருக்கு ஒன்றும் பெரிது இல்லை. அவர்களும் ஒரு வரம்பு வைத்திருப்பார்கல் ...நாட்டின் கலாச்சார சீரழிவு காரணமாக ....அப்படியே ...சித்தமபுரம் நல்லவரா கெட்டவரா? என்று ஒரு அறிக்கை விடுங்கள் பாப்போம் ...உங்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள உதவும் ....அவர் ஹிட்லரின் தங்கை போல என்பதே ...உங்கள் மனதை தெரிவு படுத்துகிறது. கடமை கண்ணியம் கட்டுப்பாடு காற்றில் பறக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X