தேவைப்பட்டால் இணைவோம்: ரஜினி, கமல் உறுதி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேவைப்பட்டால் இணைவோம்: ரஜினி, கமல் உறுதி

Updated : நவ 19, 2019 | Added : நவ 19, 2019 | கருத்துகள் (65)
ரஜினி, கமல், ரஜினிகாந்த், கமல்ஹாசன்,மக்கள் நீதி மையம், ம.நீ.மை.,

சென்னை: '' தமிழக மக்களின் நலனுக்காக மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலுடன் இணைவேன்'' என நடிகர் ரஜினி கூறியுள்ளார். முன்னதாக, கமலும், '' தேவைப்பட்டால், ரஜினியுடன் இணைந்து செயல்படுவேன்'' எனக்கூறினார்.





ஒடிசாவில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்று, சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் கூறுகையில், படிக்காத எனக்கு முதன்முறையாக டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எடப்பாடி பழனிசாமி குறித்து ரஜினி கூறிய அதிசயம் நிதர்சனம் தான். உண்மை. நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம். தமிழகத்தின் மேம்பாட்டிற்காக நானும் ரஜினியுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம் என்றார்.





இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி நிருபர்களிடம் கூறியதாவது:மக்கள் நலனுக்காக கமலும் நானும் இணைய வேண்டிய நிலை ஏற்பட்டால், இணைந்து செயல்படுவோம். எனது கருத்திற்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ்., கண்டனம் தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்து. அதற்கு கருத்து கூற விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X