பொது செய்தி

தமிழ்நாடு

குன்னுார் தாலுகாவுடன் ஜெகதளாவை இணைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

Added : நவ 19, 2019
Advertisement

குன்னுார்:'ஜெகதளா கிராமத்தை குன்னூர் தாலுகாவில் இணைக்க வேண்டும்,'என, வலியுறுத்தப்பட்டுள்ளது.குன்னுார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஜெகதளா சிறப்பு நிலை பேரூராட்சியில், கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 16 ஆயிரத்து 325 பேர் உள்ளனர். இங்குள்ள,15 வார்டுகளில், ஜெகதளா, காரக்கொரை, ஒதனட்டி, காணிக்க ராஜ் நகர், அருவங்காடு, கலைமகள் தெரு, செட்டி காலனி, ஆரோக்கியபுரம் உள்ளிட்ட கிராமங்கள், கோத்தகிரி தாலுகாவில் உள்ளதால், அரசின் அத்தியாவசிய பணிகளுக்கு, 35 கி.மீ., தூரமுள்ள கோத்தகிரிக்கு சென்று வருகின்றனர்.இந்த பிரச்னைக்கு தீர்வு காண, 'ஜெகதளா உள்ளிட்ட கிராமங்கள், 8 கி.மீ., தொலைவிற்கும் குறைவான குன்னூர் தாலுகாவில் இணைக்க வேண்டும்,' என, பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தீர்வு கிடைக்கவில்லை.இந்நிலையில், த.மா.கா., மாவட்ட துணை தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் நிர்வாகிகள், மாநில முதலவரை நேரில் சந்தித்து மனு கொடுத்து வலியுறுத்தினர்.அதில், '13 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட மற்ற கிராம மக்களின் நலன் கருதி, ஜெகதளா உட்பட பல கிராமங்களை, குன்னூர் தாலுகாவுடன் இணைக்க வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X