பொது செய்தி

தமிழ்நாடு

வனவிலங்கு - மனித மோதல் தடுக்க குடியிருப்பை ஒருங்கிணைக்கணும்

Added : நவ 19, 2019
Advertisement

வால்பாறை:வனவிலங்கு - மனித மோதலை தடுக்க தொழிலாளர்களின் வீடுகளை ஒருங்கிணைக்க வேண்டும், என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரண்டு வனச்சரகங்களிலும் காட்டு யானை, புலி, சிறுத்தை, காட்டுமாடு போன்ற வனவிலங்குகள் உள்ளன.சமீபகாலமாக வால்பாறையில் வனவிலங்கு -மனித மோதலால் உயிரிழப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில், 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எஸ்டேட்டை விட்டு வெளியேறிவிட்டனர். வனவிலங்கு- மனித மோதலை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பதால், இரண்டு ஆண்டுகளாக வனவிலங்கு - மனித மோதல் குறைந்து வருகிறது.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வனவிலங்கு - மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் யானைக்கு பிடித்தமான வாழைகளை பயிரிடக்கூடாது.
சிறுத்தைக்கு பிடித்தமான ஆடு, கோழி, நாய் போன்ற வளர்ப்பு பிராணிகளை வளர்க்க கூடாது.தொழிலாளர் குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள புதர்களை அந்தந்த எஸ்டேட் நிர்வாகங்கள் அகற்ற வேண்டும். தனித்தனியாக உள்ள தொழிலாளர் குடியிருப்பு பகுதியை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்க வேண்டும்.இயற்கை வளங்களையும், வனவிலங்குகளை பாதுகாக்க வனத்துறையினருடன் எஸ்டேட் நிர்வாகங்கள் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X