பொது செய்தி

தமிழ்நாடு

24ல் பிரதமர் மோடி சென்னை வருகை?

Added : நவ 19, 2019 | கருத்துகள் (12)
Advertisement
24ல் பிரதமர் மோடி  சென்னை வருகை?

சென்னை: தமிழக பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், தேசிய செயலருமான எச்.ராஜாவின் மகள் சிந்துஜா - சூர்யாவின் திருமணம், 15ம் தேதி, காரைக்குடி, ஆனந்த நகரில் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி, 24ம் தேதி, சென்னை, கிண்டியில் உள்ள, ஐ.டி.சி., கிராண்ட் சோழா ஓட்டலில் நடைபெறவுள்ளது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என, பிரதமர் மோடி, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு, எச்.ராஜா நேரில் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, மணமக்களை வாழ்த்துவதற்காக, பிரதமர் மோடி, சென்னை வருகிறார் என, தமிழக பா.ஜ., வட்டாரத்தில் கூறப்படுகிறது.-

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajprince - dammam,சவுதி அரேபியா
24-நவ-201921:09:19 IST Report Abuse
rajprince தமிழா விளித்துக்கொள்
Rate this:
Share this comment
Cancel
Tamilan - Doha,கத்தார்
23-நவ-201915:41:00 IST Report Abuse
Tamilan தமிழகத்திற்கு போதாதா காலம் போல இருக்கே.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23-நவ-201905:09:43 IST Report Abuse
J.V. Iyer மோடிஜியை சுற்றி நிறைய தமிழ் நண்பர்கள். அவர்கள் தமிழை பற்றியும், தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை பற்றியும் நிறைய சொல்கிறார்கள். எனவேதான் அவருக்கு தமிழ்நாட்டின் மீது பாசம். இந்தியா பிரதமராக அவர் எங்கு வேண்டுமானாலும் வரலாம். வாழ்க மோடிஜி.
Rate this:
Share this comment
Tamilan - Doha,கத்தார்
23-நவ-201916:08:40 IST Report Abuse
Tamilanஆமா, ஆமா மோடிக்கு தமிழ் நாட்டின் மீது பாசம் பொங்குகிறது. தமிழ் நாட்டில் இருக்கும் மத்திய அரசு நிறுவனவனங்களில் (Railway, Postal, Customs,CISF……), தமிழர்களுக்கான வேலைவாய்ப்பை வட இந்தியர்களுக்கு கொடுத்து தமிழ் நாட்டு மக்களுக்கு சேவை செய்தார், மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் தமிழர்களுக்கான வாய்ப்பை வட இந்தியர்களுக்கு கொடுத்து தமிழர்களுக்கு சேவை செய்தார். Bank, chellan, Railway, Reservation, form, ல் இருந்த தமிழை நீக்கிவிட்டு ஹிந்தியை திணித்து தமிழுக்கு சேவை செய்தார். NEET, எக்ஸாம் கொண்டுவந்து தமிழ் நாட்டில் உள்ள ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்தார்…………………….இது போல எண்ணற்ற சேவை செய்து இருக்கிறார்...
Rate this:
Share this comment
Thamizhan - Tamil nadu,இந்தியா
26-நவ-201912:11:28 IST Report Abuse
Thamizhan இங்க இருக்கிற வருங்கால இளைஞர்கள் எல்லாரும் கூத்தாடி பின்னாடி போகும் போது எப்படி அரசு வேலை கிடைக்கும்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X