24ல் பிரதமர் மோடி சென்னை வருகை?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

24ல் பிரதமர் மோடி சென்னை வருகை?

Added : நவ 19, 2019 | கருத்துகள் (12)
24ல் பிரதமர் மோடி  சென்னை வருகை?

சென்னை: தமிழக பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், தேசிய செயலருமான எச்.ராஜாவின் மகள் சிந்துஜா - சூர்யாவின் திருமணம், 15ம் தேதி, காரைக்குடி, ஆனந்த நகரில் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி, 24ம் தேதி, சென்னை, கிண்டியில் உள்ள, ஐ.டி.சி., கிராண்ட் சோழா ஓட்டலில் நடைபெறவுள்ளது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என, பிரதமர் மோடி, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு, எச்.ராஜா நேரில் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, மணமக்களை வாழ்த்துவதற்காக, பிரதமர் மோடி, சென்னை வருகிறார் என, தமிழக பா.ஜ., வட்டாரத்தில் கூறப்படுகிறது.-

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X